பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான
பயிற்சி பட்டறை என்று கூறி முல்லைத்தீவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் அழைத்துவரப்பட்டனர். இதன் போது சிறிலங்காப் படைகளால் வழங்கப்பட்ட கொப்பிகளையும் எழுது பொருட்களையும் பெற்றுக் கொள்ள போர்க்குற்றவாளி மேஐர் ஜென்ரல் ஜெகத் டயசின் காலில் விழுந்து வணங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் முன்னாள் எம்.பி. கனகரத்தினம் முல்லைத்தீவு கல்வி பணிப்பாளர் உதயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வடமாகாண கல்வி அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டிருந்தது. பாடசாலை நிகழ்வுகளுக்கு இராணுவத்தினரை அழைக்க வேண்டாம் என்ற இந்த நிலையில் முழுமையாக இராணுவத்தினாராலேயே நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வடமாகாணசபை உரிய கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வரு