மீண்டும் வருவோம் கலங்காதீர்கள்..! - TK Copy மீண்டும் வருவோம் கலங்காதீர்கள்..! - TK Copy

  • Latest News

    மீண்டும் வருவோம் கலங்காதீர்கள்..!


    பன்னீர் மரங்களே! பலகாலம்
    நீங்கள் வன்னியில் பூக்கவில்லையாமே..ஏன்?
    கண்ணீரோடு வெளிவந்த புலிகளைக் 
    காணவில்லை என்னும் ஏக்கமா?

    தண்ணீரைத் தினமும் வாய்க்காலில்
    தள்ளிவிட்டுப் புன்னகைக்கும் இரணை
    மடுக்குளமே-சிலகாலம் தமிழரின்
    செந்நீரைக் கலந்து வயல்களுக்கு வழங்கினாயே..
    மறந்து விட்டாயா?

    அதை நினைத்து இன்று ஏன் அழுகின்றாய்..?
    கலங்காதே.. தருவோம் சிங்களவர் குருதியை
    காத்திரு..சுவைத்துப் பார்..
    உன்தாகம் அடங்கும்..!

    நாம்போகும் பாதையெல்லாம்
    நாதஸ்வரம் ஊதும் குயில்களே
    பாலை மரங்களெல்லாம்
    பழுத்தனவா வன்னியில்..?

    பழுத்திருந்தால் உங்கள்-இனிய
    பாட்டுக்கு அங்கே குறை இருக்காதே.? அதைக்
    கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன..?
    வருவோம் மீண்டும் கலங்காதீர்கள்...

    புன்னை மரங்கள் பூத்தனவா?-நெடிதுயர்ந்த
    தென்னை மரங்கள் காய்த்தனவா?
    அண்ணையை' அன்னியப் படைகளிடம்
    இருந்து காத்த நித்திகைக் குளமே சுகமா நீ ?

    'சில்லென்று'வந்து காதில் தேன்சிந்தும்
    சில்வண்டுகளே.!
    மலர்கள் பூக்கும் காலம்இது
    மறந்துவிட மாட்டோம்..
    தேனெடுக்க மீண்டும் வருவோம்
    தேடி வையுங்கள்..இனிய
    தேனை உங்கள் கூட்டில்..!

    பாடிப் பறக்கும் கொக்குகளே!.
    மீனுண்டா வவனிக்குளத்ததில் ..? இல்லை
    நெடுந்தூரம் பறந்து அக்கராயன்
    குளம்பக்கம் போகின்றீர்களா..?

    வருவோம் மீண்டும்;மீன்பிடித்து
    விறகு வைத்து..வாட்டித் தின்ன..
    உங்களுக்குப் போட்டியாக..
    காத்திருங்கள்!

    நாம் நடந்த இனிய மண்ணே..!
    எமைவளர்த்த தொட்டிலே..
    நாம் பாடித்திரிந்த காடுகளே..பசும்புல் வெளிகளே
    பைந்தமிழர் பெட்டகமே!...

    பாதகரின் கால்பட்டு வெந்து வெதும்பி
    அழும் உங்கள் கண்ணீரைத் துடைக்க
    மீண்டும் வருவோம் கலங்காதீர்கள்..!


    -மு.வே.யோகேஸ்வரன்-
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மீண்டும் வருவோம் கலங்காதீர்கள்..! Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top