இலங்கைக்கு எதிரான ஏகாதியபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணைபோகும் செயலாகும். எனவே இதனை கடுமையாக எதிர்க்கின்றேன் எனத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பரணகம ஆணைக்குழுவிற்கு வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெறுவதில் எவ்விதமான தப்பும் இல்லையென்றும் கூறினார்.
பரணகம குழு
இது தொடர்பாக, சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்; இலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சர்வதேச ரீதியில் எமது நாட்டை தனிமைப்படுத்தி நெருக்கடியில் தள்ளிவிடுவதை இலக்காக வைத்தே ஐ.நா. சர்வதேச விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
இது இலங்கைக்கு எதிரான சதித்திட்டம். எனவே, அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. எனவே, இவ்வாறானதொரு குழுவிற்கு இலங்கையர்கள் எவரும் சாட்சியம் வழங்கக்கூடாது. அதற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விதிவிலக்கானவர் அல்ல.
எவரும் இக் குழுவிற்கு சாட்சியம் வழங்கக் கூடாது. அவ்வாறு சாட்சியம் வழங்குவோர் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய வாதிகளின் சதித் திட்டத்திற்கு துணை போகின்றவர்கள் என்றே கருதப்படுவார்கள். அப்பட்டியலிலேயே அவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இதனை கடுமையாக எதிர்க்கின்றேன்.
ஜனாதிபதியால் உள்ளூரில் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட மெக் ஷ் வெல் பரணகம விசாரணைக்குழுவிடம் சொல்ஹெய்ம் அல்ல எவரும் சாட்சியங்களை வழங்கலாம் இதனை எதிர்க்கவில்லை. ஏனென்றால் இக் குழு உண்மைகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நியாயமான விசாரணைகளை நடத்தும் உள்ளூர்க் குழுவாகும்.
இதற்கு ஆலோசனைகளை பெறுவதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டமையில் எவ்விதமான தப்பும் இல்லை. இதன் மூலம் உள்ளூர் விசாரணைக் குழுவிற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் மேலும் வலுப்பெறும் இந்நிலை உரு வாகும் போது எம்மை நெருக்கடியில் தள்ளிவிடும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவின் பலம் இழக்கப்படும் நிலைமை உருவாகும் என்றார்.
தொடர்புபட்ட செய்தி