விமானங்கள் அடுத்தடுத்து விபத்துகளில்
சிக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது.இதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் பயணிகளிடம் இழந்துள்ள நம்பிக்கையை மீண்டும் பெற அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நோக்கி பயணித்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் எம் எச் 370 விமானம் நடுவானில் மாயமானது.
அதனை தொடந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் விமானங்களில் இயந்திர கோளாறு ஏற்ப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17 உக்ரைன் வான் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இதையடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு உலக அளவில் மதிப்புக் குறைவடைந்துள்ளதுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் பெயரை கேட்டாலே பயணிகள் அலறியடித்து ஓடுகிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே மலேசியன் ஏர்லைன்ஸ் தமது பெயரை மாற்றுவதன் மூலம் மீண்டும் வாடிக்கையாளர்களிடம் ஸ்திரத்தன்மையை பெற முடிவு செய்துள்ளது.