வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட 39 கார்களுக்கு கீழாக ரோலர் ஸ்கேட்டில் உடலை வளைத்துச் சென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார் இச்சாதனைக்குச் சொந்தக் காரனான பெங்களுருவைச் சேர்ந்த 6 வயதான காகன் சதீஷ் 29 விநாடிகளில் 70 மீற்றர் தூரத்திற்கு தரையிலிருந்து 5 அங்குல இடைவெளியில் உடலை வில்லாக வளைத்துச் சென்றுள்ளான.
‘நான் ஸ்கேட்டிங்கை விரும்புகிறேன். எனது 3 வயதிலிருந்து இதனைச் செய்கின்றேன் (ஸ்கேட்டிங்). 100 கார்களுக்கு கீழாகச் செல்வதே எனது அடுத்த இலக்கு. ஒலிம்பிக்கிக்கு நான் செல்ல வேண்டும்’ என்கிறான் சாதனைச் சிறுவன் சதீஷ்.
உள்ளுர் ஸ்கேட் கழகத்தில் தனது 3 வயதில் சேர நினைத்த சதீஷை வயது காரணமாக நிராகரிப்பட்டுள்ளான். ஆனால் சதீஷால் ஸ்கேட்டிங் செய்ய முடியும் எனத் தீர்மானித்த சதீஸின் தாய் ஹேமா சதீஷ (28 வயது) முறையான ஸ்கேட்டிங் பயிற்சிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.
‘அவனது உடல் நெகிழ்தன்மையானது என்பதை எங்களால் காண முடிந்தது. இதன் பின்னரே முறையான பயிற்சிக்கு அனுப்ப தீர்மானித்தோம். இது அவனது விளையாட்டு வாழ்க்கையின் ஆரம்பம் என தாம் எதிhபார்க்கின்றோம்.
பயிற்சியின்போது பல தடவைகள் அவன் காயப்பட்டுள்ளான். ஆனால் ஒருபோதும் பின்வாங்கியதில்லை’ எனக் கூறியுள்ளார் சதீஷின் தாய் ஹேமா.