அங்குசம் திரை விமர்சனம் - TK Copy அங்குசம் திரை விமர்சனம் - TK Copy

  • Latest News

    அங்குசம் திரை விமர்சனம்

    புதிய பாரதம் படைக்கும் விதமாக "ஆர்டிஐ எனப்படும் தகவல்
    அறியும் உரிமை சட்டத்தை பாமரனுக்கும் புரியும் விதத்தில் "அங்குசம் திரைப்படமாக படைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் - தயாரிப்பாளர் மனுக்கண்ணன்.

    சாலைவசதி, பேருந்துவசதி இல்லாத தங்கள் கிராமத்திற்கு சகல வசதிகளையும் இளைஞர்களை திரட்டி, போராடி கிடைக்க செய்கிறார் நாயகர் ஸ்கந்தா. அதனால் ஊரே அவரை கொண்டாடுகிறது. தான் துரத்தி, துரத்தி காதலித்தபோது திரும்பி பார்க்காத நாயகி ஜெயதி குகா, இதுமாதிரி நாயகரின் நற்காரியங்களால் அவரை காதலிக்க தொடங்குகிறார். அதுமுதல் நாயகருக்கு மேலும் ஏதாவது நற்காரியங்கள் செய்ய வேண்டுமென உத்வேகம் ஏற்படுகிறது. அதனால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., "காதல் தண்டபாணி அந்த ஊருக்கு பள்ளிக்கூடம் கட்டுவதில் அடிக்கும் கொள்ளையை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கண்டுபிடிக்க துணிகிறார். 

    அதனால் ஹீரோவும், அவரது காதலும் படும் பாடும், தகவல் அறியும் உரிமை சட்டத்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும்? எனும் பாடமும் தான் "அங்குசம் படம் மொத்தமும்! நாயகராக ஸ்கந்தா, நாயகியாக ஜெயதி குகா, பெற்றோராக வாகை சந்திரசேகர், ரேகா சுரேஷ், டாக்டர் சாமுவேல், மீரா கிருஷ்ணன், மாமனாக சார்லி, நண்பர்களாக ஸ்ரீநாத், "காதல் சுகுமார், கிருஷ்ணா, வில்லன்களாக "காதல் தண்டபாணி, "கராத்தே ராஜா, பாவா லட்சுமணன், பாலாசிங், ரஞ்சன், சிமோர், தலைமை செயலாளராக பிருந்தாதாஸ் உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். 

    ரா.ரா.வின் வசனம், ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, தீபக்குமார், திருஞான சம்பந்தம் இருவரது ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் மனுக்கண்ணனின் எழுத்து-இயக்கத்தில், எதற்கெடுத்தாலும் "கையூட்டு - லஞ்சம் எனக்கேட்கும் அரசு அதிகாரிகளுக்கு சவுக்கடி தரும் விதமாக, ஒரு உண்மை சம்பவத்தை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் "அங்குசம் - "ஆர்டிஐ எனும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை முதன்முதலாக தமிழ் சினிமாவில் பறைசாற்றியிருப்பதற்காக பாராட்டப்பட வேண்டிய படம்! ஆனால் அது பல இடங்களில் பாடமாக தெரிவது சற்றே போரடித்தாலும், "அங்குசம்" - "கருத்தாழம்!"
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: அங்குசம் திரை விமர்சனம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top