தமிழை விட இந்தி சினிமாவின் வியாபார வட்டம் பெரியது என்பதால், இன்னும் பிரமாண்டத்தை கூட்டி ஹாலிடேவை படமாக்கியுள்ள முருகதாஸ், இப்படம் தனக்கு இந்தியில் இன்னுமொரு பெரிய பிரேக்காக அமையும் என்று எதிர்பார்க்கிறாராம். இருப்பினும், அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே, தமிழில் விஜய் நடிப்பில் கத்தி படத்தை தொடங்கி விட்ட முருகதாஸ், இந்த படத்தை 60 சதவிகிதத்துக்கு மேல் இயக்கிய பிறகு, இப்போதுதான் ஹாலிடே படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
கத்தி படப்பிடிப்பு நடந்து வந்த போது, ஹாலிடே படத்தின் இறுதிகட்ட வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்த முருகதாஸ், தற்போது அப்படத்தின் இறுதிகட்ட பணிகளுக்காக மும்பை சென்றிருக்கிறார்.