இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதுவரை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றினை பதிவு செய்யாத இலங்கை நேற்று முன்தினம் சாதனையை பதிவு செய்துள்ளது” இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1:0 என்ற ரீதியில் கைப்பற்றியது.

இதில் மொய்ன் அலி ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும், ஜோரூட் 31 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் தம்மிக்க பிரசாத் 5 விக்கெட்களையும், ரங்கன ஹேரத் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்க ளையும் இழந்து 457 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் அஞ்சலோ மத்தியூஸ் டெஸ்ட் போட்டியில் பெற்ற சிறந்த ஓட்ட பெறுதியான 160 ஓட்டங்களையும், மஹேல ஜெய வர்த்தன 79 ஓட்டங்களையும், குமார் சங்ககார 55 ஓட்டங்களையும் பெற்றனர். ரங்கன ஹேரத் 48 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை மத்தியூஸ் உடன் இணைந்து 9-வது விக்கெட் இணைப்பாட்டமாக 149 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பந்துவீச்சில் லியாம் பிளங்கட் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்களையும், மொய்ன் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்கக்கார 79 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 45 ஓட்ட ங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லியாம் பிளங்கெட் 5 விக்கெட்களையும், ஸ்டுவோர்ட் ப்ரோட் 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் இரண்டு விக்கெட்க ளையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 365 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சாம்ரொப்சன் 127 ஓட்டங்களையும், கரி பலன்ஸ் 74 ஓட்டங்களையும், இயன் பெல் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சமின்ட எரங்க, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் தலா 4 விக் கெட்களைக் கைப்பற்றினர். ஒன்றிற்கு மேற்பட்ட போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர் ஒன்றை இலங்கை அணி இங்கிலாந்தில் வைத்து வெற்றி பெற்றுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக அஞ்சலோ மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை அணியின் தொடர் நாயகனாக அஞ்சலோ மத்தியூசும், இங்கிலாந்து அணியின் தொடர் நாயகனாக ஜேம்ஸ் அன்டர்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.