'தே.ஜ., கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவுக்கு,
தெற்காசிய கூட்டமைப்பான, 'சார்க்' நாடுகளின் தலைவர்களை அழைத்தது, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு,'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிரதமராக பொறுப்பேற்ற பின், நரேந்திர மோடி, முதல் முறையாக, டில்லி, அசோகா சாலையில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.அங்கு, மோடி பேசியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். இதற்காக, இரவும், பகலும், அயராமல் உழைத்த கட்சி நிர்வாகிகளை பாராட்டுகிறேன். தேர்தலில் உறுதியளித்தபடி, திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தே.ஜ., கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவுக்கு, தெற்காசிய கூட்டமைப்பான, சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தது, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு.
'இது, எப்படி நடந்தது' என, உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், இந்த விஷயத்தை நம்ப முடியாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். சார்க் நாடுகளின் தலைவர்களை, என் பதவியேற்பு விழாவுக்கு அழைத்தது, நம் வெளிநாட்டு கொள்கையின் பலம்.இவ்வாறு மோடி பேசினார்.