தமிழ் சினிமாவில் மகத்தான திரைப்படங்களையும்
திறமையான இயக்குனர்களையும் உருவாக்கியவர் பாலுமகேந்திரா. அவரது பட்டறையில் இருந்து தான் பாலா, ராம் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்குனர்களாக உருவாகி வந்தார்கள்.
அவர் இருக்கும் போதே மூன்று பேரும் தமிழ் சமூகம் கண்டிராத சிறப்பான படங்களை உருவாக்கி தாங்கள் கேமிரா கவிஞரின் சிஷ்யர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். பாலு மகேந்திரா கடைசியாக எடுத்த தலைமுறைகள் படம் தாய்க்கும் மகனுக்கும், தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான பாசப்பிணைப்பின் அழுத்தத்தை உணர வைத்தது. அசத்தலான ஒளிப்பதிவால் ரசிகர்களின் நெஞ்சங்களில் புகுந்த பாலு மகேந்திரா தற்போது நம்முடன் இல்லை.
அவர் இல்லை என்றாலும் அவரது புகழ், அவரால் உருவாக்கப்பட்டுள்ள இயக்குனர்களாலும், அவரது திரைப்படங்களாலும் பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட பாலு மகேந்திராவை பற்றி கல்யாண சமையல் சாதம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னா மகத்தான டி.வி.டி ஒன்றை தயாரித்துள்ளார். இந்த டி.வி.டி.யும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் என நம்புவோம்.