மு.காங்கிரஸ் கூட்டமைப்போடு கைகோர்த்திருந்தால் அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்: மாவை எம்.பி - TK Copy மு.காங்கிரஸ் கூட்டமைப்போடு கைகோர்த்திருந்தால் அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்: மாவை எம்.பி - TK Copy

  • Latest News

    மு.காங்கிரஸ் கூட்டமைப்போடு கைகோர்த்திருந்தால் அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்: மாவை எம்.பி

    கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் எம்மோடுகை கோர்த்து நின்றிருந்தால் இலங்கை அரசியலிலே ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும்  என தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
    அனைத்துலக சமூகமும், தமிழ்த் தேசிய அரசியலும் எனும் கருப்பொருளின் கீழ் நேற்று மட்டக்களப்பு கல்லடியில் அரசியல் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
    இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
    வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் அரசு இராணுவ மயமாக்கப்பட்ட சூழலில் தேர்தலை நடாத்தியிருந்தது அதிலும் எமது மக்கள் நிதானமாக வாக்களித்துள்ளார்கள்.
    எங்களை நாங்கள் ஆளுகின்ற உரிமை இருக்கின்றது. எமது நிலத்தில் எமது ஆட்சி வேண்டும் என்ற இலட்சியத்திற்காக யாழ் மக்கள் தமது பலத்தினை நிலை நாட்டி இருக்கின்றார்கள்.
    வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற பின்னர் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றிருந்தால் அவை இன்னும் தாக்கத்தினைச் செலுத்தியிருக்கும்.
    அதற்காக எந்த ஒரு நாடும் ஜனநாயகத் தீர்ப்பில் மட்டும்தான் விடுதலை பெற்றுள்ளது என்பதனை நான் கூறிக் கொள்ளவில்லை, பல நாடுகள் ஆயுதம் ஏந்திப்போராடி தமது சுதந்திரத்தினை நிலைநாட்டியுள்ளன. அது இங்கும் நிகழ முடியும் என நாங்கள் நம்பினோம். அந்தப் பலம் எமக்குக் கட்டியெழுப்பப் பட்டிருந்தது. ஆனால் அதில் முக்கியமான இராஜதந்திர முறைகளைத் தவறியிருந்தாம். நம்பிக்கைகள் நிறைவேறுவதற்கு இராஜதந்திரமும் தேவை என்பது நியதியாகவுள்ளது.
    தந்தை செல்வா அவர்களின் தலைமையிலே 67 வழக்கறிஞர்களுடன் வாதாடி நாங்கள் தெரிவித்துக் கொண்டது என்ன வென்றால், இந்த இறைமை யாரிடம் இருக்கின்றது என்பதுதான் கேள்வி.
    இறைமை என்பது மனிதனுடைய பிறப்புரிமை. இறைமை பற்றி அரசியல், அறிவில் ரீதியாகப் பார்க்கின்ற பொழுது மக்களிடம்தான் அது இருக்கின்றது என்பதாகும்.
    போரிலே எங்களுடைய சுதந்திரத்தினைப் பறித்தெடுத்த நாடுகள், மீண்டும் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் என்ற பெயரில் உள்ளபோது அந்த சுதந்திரம் எமது மக்களுக்கு திரும்பி விட்டது. என்பதுதான் எமது வாதமாகும்.
    தமிழ் மக்களைப் பெறுத்த வரையில் அரசியல் அமைப்புக்கள் உருவாக்கப்பட்ட எந்தச் சந்தர்ப்பத்திலும். எமது மக்கள் எமக்குத் தந்த இறைமையினை இந்த அரசாங்த்திற்கோ வேறு எவருக்குமோ நாங்கள் கொடுக்க வில்லை. 
    ஜனநாயகத்தின் அடிப்படையில் எம்மிடம் வந்த சுதந்திரம் திரும்பிவிட்டது எமதும், எம்முடைய சம்மதம் இல்லமல் இந்த ஆட்சி நடைபெறுகின்றது என்பதும், அரசியல் அமைப்பு உருவாக்கப் பட்டிருப்பதுவும், அது தமிழ் மக்களின் இறைமையினைப் பாதிக்கின்றது என்பதுதான் எமது கருத்தாகும்.

    2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எங்களை அழைத்திருந்தது. அது ஒரு அருமையான சந்தர்ப்பம். அத்திணைக்களம் எம்முடைன் பேசினார்கள். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையினைக்கோர வில்லை என சிலர் கதைக்கின்றார்கள், ஊடகங்களிலும் தெரிந்தும் தொரியாதவாறு எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
    ஆனால் அன்று அந்த இராஜாங்கத் திணைக்களத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில இந்த அரசுக்கு ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என எழுத்து மூலமாக நாம் கோரியுள்ளோம். இதனை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
    ஐ.நா சபையிலுள்ள அங்கம் அந்த அங்கங்களிலுள்ள அங்கத்தவர்கள். பொதுச்சபை, பாதுகாப்புச்சபை. மனித உரிமைகள் பேரவை பேன்றவற்றினால்தான், இந்த பிரேரணை உருவாக்கப் பட்டுள்ளன. இவை தனிப்பட்ட ஒரு அரசியற் கட்சியினால் முடியாது.
    நவநீதம் பிள்ளை அவர்களின் அறிக்கையிலும் தருஷ்மன் அவர்களுடைய அறிக்கையினாலும்தான் இந்த நாட்டிலே மூன்றாவது முறையாக இந்த விசாரணை எடுக்கப்பட்டுள்ளது.
    இறுதியில் 2014.03.14 ஆம் திகதி அதிக வாக்குகளால் இலங்கைக்கு சர்வதேச விசாரணை தேவை என நிறைவேற்றப் பட்டிருக்கின்றது.
    நாங்கள் பல விடயங்களை எமது எல்லைக்குட்பட்டு ஆராய்ந்திருக்கின்றோம். 1983 ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஒரு மிகப்பெரிய கலவரம் இடம்பெற்று, எமது மக்கள் கொல்லப்பட்டார்கள்.
    அப்போது எமது தலைவராக அமிர்தலிங்கம் அவர்கள் செயற்பட்டு இவ்விடயங்களை மிகவும் துல்லியமாக இந்திய அரசுக்கு எடுத்துரைத்தார்.
    தற்போது அமெரிக்கா, ஐரோப்பா, பிரித்தானியா, போன்ற நாடுகள், ஆரதவு தெரிவிக்கின்ற வேளையில், எமது பக்கத்து அதாரங்களையும் நியாயங்களையும் திரட்ட வேண்டும்.
    நில ஆக்கிரமிப்புக்கள், மனித அழிப்புக்கள், போன்றவற்றோடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள், பல விடையங்களுக்கு இந்த அரசு பதில் செல்லியே தீரவேண்டும்.
    இவைகள் அனைத்தும் ஆவணங்களாக்கபடல் வேண்டும். இவற்றுக்கான சாட்சியங்களைப் பதிவு செய்யப்பட வேண்டும். தற்போது சர்வதேச விசாரணை பற்றியும், ஏனைய பிற விடயங்கள் பற்றியும் பேசுகின்றோம் ஆனால் கடந்த காலங்களில் இடம்பெற்ற அழிவுகள் துன்பியல் சம்பவங்கள், மற்றும் பாலியல் தஷ்பிரயோகங்கள் பற்றியெல்லாம் சரியான ஆவணங்ளை நாங்கள் பதிவு செய்ய வேண்டும் இல்லா விட்டமால் அது எம்மீதுள்ள ஒரு குற்றமாக மாறிவிடும். அந்த வகையில் 11500 சம்பவங்களும் இடங்களும் எம்மிடம் பதிவிலுள்ளன.
    பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதை மையப்படுத்தி அறிக்கைகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
    சர்வதேச விசாரணை நடக்கும் அவற்றுக்கான ஆதாரங்களையும் சாட்சியங்சகளையும் கொடுக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டு. இன்றும் எவ்வளவோ பாரிய பொறுப்புக்கள் எமக்கு இருக்கின்றன.
    சர்வதேச மட்டத்தில எமக்கு வேலை செய்வதற்கு அங்கே ஆட்கள் தேவை அதேபோல் அதற்கு ஈடாக இந்த ஆவணங்களைத் தயாரிப்பதற்கும் அறிக்கைகளைத் தயார் செய்வதற்கும் இங்கேயும் பொறுப்புமிக்கவர்கள் தேவையாகும்.
    இதற்கு எமது கட்சிக்காரர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன் உறுப்பினர்கள் எமது மக்களின் வீடு விடாகச் சென்று கண்ணீர் கதைகளைப் பெறவெண்டியுள்ளது.
    இலங்கை இந்திய ஒப்பந்தம்கூட இந்த 13வது திருத்தச் சட்டம் பிரதிபலித்து நிற்கின்றது என்பதனை நாங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றோம். அதேபோல் இந்த திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வதாக அமையாது என்பதும் பல சந்தர்ப்பத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
    13 வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண வேண்டும என்று சொல்லப்படுகின்றது. மாநிலத்திற்கு என்ன அதிகாரம். மத்திய அரசுக்கு என்ன அதிகாரம், முஸ்லிம்களும் தமிழர்களுக்கும் என்ன பகிரப்பட வேண்டும் என்றெல்லாம் அதில் தெளிவாக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அமுல்படுத்துங்கள் என்றுதான் இந்தியாவும் சொல்கின்றது.
    இந்த நாட்டிலே இந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும், இதற்கு முன்னிருந்த சந்திரிக்காவின் அரசாங்கமும், மழுங்கடித்துள்ளன.
    சர்வதேச சந்தர்ப்பங்கள் எப்போதும் நீடித்து நிற்பவை அல்ல. இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மு.காங்கிரஸ் கூட்டமைப்போடு கைகோர்த்திருந்தால் அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்: மாவை எம்.பி Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top