ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதிகளை பயன்படுத்த பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் கொழும்பின் தேர்தல் அமைப்பாளர்கள் குழப்பநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்தே அவர் முன்னாள் இராணுவ அதிகாரிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இதனடிப்படையில் கொழும்பு நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலயத்திற்கும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாதிபதியின் கொழும்பிற்கான முழுயான பிரச்சார நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கு ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி எகோடவெல நியமிக்கப்பட்டுள்ளார்.