கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய, ஹோகந்தரவில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் 32 ரக விமானமே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் விமானப்படையின் பேச்சாளர் கீதன் செனவிரட்ன தெரிவிக்கையில், ரஸ்யாவின் தயாரிப்பான அன்ரனோவ் 32 ரக விமானம் இன்று காலை கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பறப்பில் ஈடுபட்டிருந்தது. இது ஐந்துபேர் பயணித்தனர். ரத்மலான வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தவேளையில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. காலை 6.20 மணியளவில் வானிலை சீரின்மையால் விபத்துக்குள்ளானதாக அறிகிறோம், என்றார்.
இன்று காலை விபத்துக்குள்ளான இந்த விமானம் இறப்பர் தொழிற்சாலை ஒன்றின் மீது விழுந்துள்ளதாகவும், இதனால் அதன் கூரைப் பகுதி சேதத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்திருக்கின்றனர்.