இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது.
அதன்படி பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை லீட்டருக்கு 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணெண்னை ஒரு லீட்டர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.