நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்துக்கோ பொதுவேட்பாளருக்கோ தாம் ஆதரவளிக்கவில்லை என்று பொதுபல சேனா அறிவித்துள்ளது.
பொதுபல சேனாவின் மாநாடு கொழும்பு ஹைட்பார்க் கோனரில் .நடைபெற்றது இதன்போது உரையாற்றிய அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரதெனிய நந்த தேரர்,கடந்த மற்றும் நிகழ் காலத்தில் பொதுவேட்பாளரின் நடவடிக்கைகள் மற்றும் அவரது கூட்டணியினரது நடவடிக்கைகள் என்பவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு ஆதரவளிக்கவில்லை என்று குறிப்பிட்டார் அதேநேரம் அரசாங்கத்துக்கும் தாம் ஆதரவளிக்கவில்லை என்று தேரர் தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, மைத்திரிபாலவுக்கு பின்னால் இருப்பதால் அவரை நம்ப முடியாது என்று தேரர் கூறினார்