கொஸ்லந்தை மீரியபெத்த மண் சரிவுப் பிரதேசம் பாதுகாப்பு வலயமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இம்மண் சரிவுப் பிரதேசத்தில் மரக்கன்றுகளை நாட்டுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இப்பகுதியில் மண்சரிவில் இறந்தவர்களுக்கான நினைவுத்தூபியொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இம்மண்சரிவில் 37 பேர் பலியானதுடன் 13 பேரின் சடலங்கள் மட்டுமே தோண்டி எடுக்கப்பட்டன. இறந்தவர்களின் உறவினர்களினது பலத்த வேண்டுகோளுக்கிணங்க சடலங்கள் தோண்டி எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டன.
கடந்த அக்டோபர் 29ம் திகதி இடம்பெற்ற மேற்படி மண்சரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் மேற்கொள்ளப்படுமென்றும் பதுளை மாவட்ட அரச அதிபர் ரோகண கீர்த்தி திசாநாயக்க தெரிவித்தார்.