பொதுநலவாய நாடுகள் மகிந்தவை நீக்க யோசனை - TK Copy பொதுநலவாய நாடுகள் மகிந்தவை நீக்க யோசனை - TK Copy

  • Latest News

    பொதுநலவாய நாடுகள் மகிந்தவை நீக்க யோசனை

    எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் மோசடியானதாக இருந்தால், மகிந்த ராஜபக்ஷ தற்போது வகித்து வரும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் யோசனை ஒன்றை கொண்டு வர சில அங்கத்துவ நாடுகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


    ஜனாதிபதிக்கும் பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய அமைப்பின் தலைமையகத்திற்கும் இடையில் இணைப்பு பணிகளை மேற்கொண்டு வந்த பிரித்தானியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ், அந்த பதவியில் இருந்து விலகிய பின்னர் இணைப்பு பணிகள் முற்றாக நின்று போயின.

    இதனை நன்கு அறிந்துள்ள ஜனாதிபதி, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகரை நியமிக்காது இருந்து வருகிறார்.கிறிஸ் நோனிஸ் மீண்டும் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படலாம் என்பதால், சஜின் வாஸ்குணவர்தன, அமைச்சசர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்சேனுகா செனவிரத்ன ஆகியோர் அதனை தடுக்கும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில், உயர்ஸ்தானிகர் பதவி மீண்டும் வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா என ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒருவர் கிறிஸ் நோனிஸிடம் கேட்டுள்ளார். எனினும் அவர் அதனை நிராகரித்துள்ளார்.
    எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதியும் கிறிஸ் நோனிஸூம் வாரத்தில் இரண்டு தடவைகள் தொலைபேசியில் உரையாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜனாதிபதித் தேர்தல் மோசடியானதாக இருக்கும் பட்சத்தில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடப்பு தலைவருக்கு எதிராக அங்கத்துவ நாடுகள் யோசனை முன்வைத்தால், அதனை தடுத்து நிறுத்தக் கூடிய கிறிஸ் நோனிஸ் போன்றவர்களை தேடுவது சிரமமானது என்பதை ஜனாதிபதி அறிந்துள்ளார்.

    அதனை செய்யக் கூடியவர்களான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, கலாநிதி தமரா குணநாயகம், கலாநிதி தயான் ஜயதிலக்க ஆகியோர் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிகவும் சிரமமத்திற்கு உள்ளாகி இருப்பதாக சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பொதுநலவாய நாடுகள் மகிந்தவை நீக்க யோசனை Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top