இலங்கை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி மாறல்கள் இரண்டு தரப்பிலும் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் இன்று கட்சி மாறல் தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பின்போது எதிர்பாராத செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்தியாளர் சந்திப்புக்கு வந்திருந்த தெஹிவளை, கல்கிஸ்ஸை நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் சவீந்திர டி சில்வா குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை புகழ்ந்து பேசினார்.
அத்துடன் தாம் மஹிந்த ராஜபக்சவை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்தநிலையில் அவர், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வந்துள்ளதாக முன்னதாக அறிமுகம் செய்து வைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க உட்பட்டவர்கள் வியப்புக்கு உள்ளாகினர்.