பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலக தமிழர் பேரவை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.பேரவை இன்று வி;டு;த்துள்ள அறிக்கை ஒன்றில், சுதந்திரத்துக்கு பின்னர் தமிழர்கள், பெரும்பான்மை தேர்தல் முறையினால் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழ் மக்கள் நடைமுறை தேர்தல் முறையின் கீழ் தமது ஜனநாயக உரிமைகளை காக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் சிவில் சமூக அமைப்பும் இதனையொத்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசினால் சிங்களவர்களின் வாக்குகளை இழந்து விடலாம் என்று வேட்பாளர்கள் எண்ணும் போது எவ்வாறு அவர்கள் பதவிக்கு வரும் போது தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்று தமிழ் சிவில் சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது.