ஏட்டிக்குப்போட்டியாக தீவிரமடையும் நகர்வுகள் - TK Copy ஏட்டிக்குப்போட்டியாக தீவிரமடையும் நகர்வுகள் - TK Copy

  • Latest News

    ஏட்டிக்குப்போட்டியாக தீவிரமடையும் நகர்வுகள்

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

    இலங்கை விவ­காரம் தொடர்பில்
    விசா­ரணை நடத்­து­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ர­ணைக்­கு­ழு ஜெனி­வாவில் செயற்­பா­டு­களை ஆரம்­பித்­துள்­ளது.

    அதே­போன்று இலங்­கை­யிலும் காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரணை நடத்தும் ஆணைக்­கு­ழுவின் ஆணை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அதன் செயற்­பா­டு­களும் வேக­ம­டைய ஆரம்­பித்­துள்­ளன. ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையின் விசா­ரணை குழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கவும்

    மூன்று நிபு­ணர்கள் செயற்­பட்­டு­வ­ரு­கின்ற நிலையில் இலங்­கையில் உள்­ளக செயற்­பாட்டை முன்­னெ­டுக்­க­வுள்ள காணாமல் போனோர் தொடர்­பான ஆணைக்­கு­ழு­வுக்கும் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக மூன்று சர்­வ­தேச நிபு­ணர்­களும் தற்­போது நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்­க­வுள்­ளனர்.

    அது மட்­டு­மல்ல, உள்­ளக விசா­ரணைக் குழு­வுக்கு மேலும் மூன்று நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். இவ்­வாறு சர்­வ­தேச மட்­டத்­திலும் உள்­நாட்டு மட்­டத்­திலும் ஏட்­டிக்குப் போட்­டி­யாக காய்­ந­கர்த்­தல்­களும் நகர்­வு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

    அந்­த­வ­கையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை செயற்­பா­டுகள் தீவி­ர­ம­டைய ஆரம்­பித்­துள்ள சூழலில் அதனை முறி­ய­டிக்கும் அல்­லது வலு­வற்­ற­தாக்கும் நோக்கில் இலங்­கையின் உள்­ளக செயற்­பா­டு­களும் தீவி­ர­ம­டைய ஆரம்­பித்­துள்­ளன.

    அத்­துடன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாகிஸ்தான் விஜயம் ஜப்­பானின் விசேட சமா­தான தூதுவர் யசூஷி அகா­ஷியின் இலங்கை விஜயம், செப்­டெம்­பரில் இடம்­பெ­றப்­போ­கின்ற சீன ஜனா­தி­ப­தியின் இலங்கை விஜயம் என நாட்டின் அர­சியல் மற்றும் இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் தீர்க்­க­மான கட்­டத்தை நோக்கி நகர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

    ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை செயற்­பா­டுகள் தொடர்பில் தனது பத­வி­யி­லி­ருந்து சில தினங்­களில் ஓய்­வு­பெ­ற­வுள்ள நவ­நீதம் பிள்ளை அண்­மையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதா­வது, இலங்­கைக்கு விஜயம் செய்­யா­ம­லேயே போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள முடியும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

    அத்­துடன் இந்­தியா மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடு­க­ளு­க்கு விசா விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் வெளி­யான செய்­தி­களில் உண்­மை­யில்லை. இலங்­கை­யி­டமோ அல்­லது வேறு நாடு­க­ளி­டமோ விசா கோரி எவரும் விண்­ணப்­பிக்­க­வில்லை என்றும் அவர் திட்­ட­வட்­ட­மாக குறிப்­பிட்­டுள்ளார்.

    இதே­வேளை நவ­நீதம் பிள்­ளையின் அறிக்­கைக்கு பதி­ல­ளித்­துள்ள வெளி­வி­வ­கார அமைச்சு கடும் விசனம் தெரி­வித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில் இலங்கை விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை தனிப்­பட்ட ரீதியில் பக்­கச்­சார்­பாக நடந்­து­கொண்­டு­வ­ரு­கின்றார்.

    அவர் ஐ.நா. விசா­ரணை செயற்­பாட்டில் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க முயற்­சிப்­பது இதன்­மூலம் நிரூ­ப­ண­மா­கின்­றது என்று கடும் விமர்­ச­னங்­க­ளுடன் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் யுத்தம் முடி­வ­டைந்த மறு­வா­ரமே உள்­நாட்டு செயற்­பா­டு­களின் முக்­கி­யத்­து­வத்­துக்கு மதிப்­ப­ளிக்­காமல் அப்­போதே சர்­வ­தேச விசா­ர­ணையை கோரி­யவர் என்றும் அவரின் செயற்­பா­டுகள் அதி­ருப்­தி­ய­ளிப்­ப­தா­கவும் அமைந்­துள்­ள­தா­க வெளி­வி­வ­கார அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

    அது­மட்­டு­மன்றி வெளி­வி­வ­கார அமைச்சின் அறிக்­கையில் முக்­கிய விடயம் ஒன்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதா­வது புதி­தாக ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யா­ள­ராக பத­வி­யேற்­க­வுள்ள செயித் அல் ஹுசைன் பக்­கச்­சார்­பின்­றியும் விதி­மு­றை­க­ளுக்கு அமை­வா­கவும் சமத்­தன்­மை­யு­டனும் இறை­மையை மதித்தும் செயற்­ப­டுவார் என நம்­பு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.

    ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளை­யுடன் இலங்கை அரச தரப்பு நீண்ட நாட்­க­ளா­கவே முரண்­பட்­டு­வந்­தது. நவ­நீதம் பிள்­ளையை விமர்­சித்து ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வை­யி­லேயே அர­சாங்க பிர­தி­நி­திகள் உரை­யாற்­றினர்.

    எனினும் அனைத்து விட­யங்­க­ளுக்கு மத்­தி­யிலும் நவ­நீதம்பிள்ளை கடந்த 2013 ஆம் ஆண்டில் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார். இருந்­த­போ­திலும் அவர் மீதான இலங்­கையின் விமர்­ச­னங்கள் நீடித்தே வந்­தன. இம்­மா­தத்தின் இறுதிப் பகு­தியில் நவ­நீதம் பிள்ளை ஓய்­வு­பெற்று செல்­ல­வுள்­ள­துடன் புதிய ஆணை­யாளர் பத­வி­யேற்­க­வுள்ளார்.

    இந்­நி­லையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை செயற்­பா­டுகள் மந்த கதியில் இடம்­பெ­று­வ­தாக அண்­மைக்­கா­லங்­களில் தக­வல்கள் வெளி­வந்­தன. எனினும் நவ­நீதம் பிள்­ளையின் தற்­போ­தைய அறி­விப்பின் மூலம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லக விசா­ர­ணையும் வேக­மாக நடை­பெற்­று­வ­ரு­கின்­றமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

    ஜெனி­வாவில் அலு­வ­ல­கத்தை அமைத்து விசா­ரணை செயற்­பா­டு­களை ஆரம்­பித்­துள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வா­னது இது­வரை எந்­த­வொரு நாட்­டுக்கும் செல்­வ­தற்­கான விசா அனு­ம­தியை கோர­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

    அத்­துடன் இலங்கை வரு­வ­தற்கும் ஐ.நா. விசா­ர­ணை­யா­ளர்கள் இது­வரை விண்­ணப்­பிக்­க­வில்லை என்றே கூறப்­ப­டு­கின்­றது. ''இலங்கை வரு­வ­தற்­காக ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை குழு­வினர் இன்னும் விண்­ணப்­பிக்­க­வில்லை. ஆனால் அவர்கள் அவ்­வாறு இலங்கை வர விண்­ணப்­பிக்­க­மாட்­டார்கள் என்று கரு­து­கின்றோம்.

    காரணம் விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­மாட்டோம் என்று கூறி­விட்­டதால் அவர்கள் இலங்கை வர விண்­ணப்­பிக்­க­மாட்­டார்கள்'' என்று வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார். ஆனால் ஐக்­கிய நாடு­களின் விசா­ரணைக் குழு­வினர் தாங்கள் இலங்கை செல்­வ­தற்கு விசா­வுக்கு விண்­ணப்­பித்தோம் என்ற பதிவை மேற்­கொள்­ள­வா­வது விண்­ணப்­பிப்­பார்கள் என்றும் எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது.

    எது எவ்­வா­றெ­னினும் இது­வரை எந்த அனு­ம­தியும் கோரப்­ப­ட­வில்லை. இதனை நவ­நீதம் பிள்­ளையின் அண்­மைய கூற்றும் உறு­தி­ப்ப­டுத்­தி­யுள்­ளது. ஐக்­கிய நாடு­களின் விசா­ரணைக் குழு­வுக்கு ஆலோ­சனை வழங்க நிபுணர் குழுவில், சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசை வென்­றுள்­ள­வரும், பின்­லாந்து அரசின் முன்னாள் அதி­ப­ரு­மான மார்ட்டி அதி­சாரி, நியூ­சி­லாந்தின் முன்னாள் ஆளுநர் சில்­வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர்கள் சங்­கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகிய மூன்று விசேட நிபு­ணர்கள் இடம்­பெற்­றுள்­ளனர்.

    இவர்கள் மூவரும் கடந்­த­வாரம் லண்­டனில் சந்­தித்து விசா­ரணை செயற்­பா­டுகள் குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். அதா­வது விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு சாட்­சி­யங்­களை பெறல் சாட்­சி­களை பாது­காத்தல் மற்றும் அவற்றை ஆய்வு செய்தல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து இதன்­போது ஆரா­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

    இந்­நி­லையில் விசா­ரணை அறிக்­கை­யா­னது எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 28 ஆவது அமர்வில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்கு முன்னர் செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள 27 ஆவது அமர்வில் வாய்­மூல அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. செப்­டெம்பர் மாத அமர்­வுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்­ளது.

    அந்­த­வ­கையில் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 31 ஆம் திகதி ஆகும்­போது விசா­ரணை அறிக்கை தயா­ரித்து முடிக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும் என்றும் கூறப்­பட்­டுள்­ளது. இலங்­கையை பொறுத்­த­வரை ஐக்­கிய நாடு­களின் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு எக்­கா­ரணம் கொண்டும் ஒத்­து­ழைப்பு வழங்­க­மாட்டோம் என்­ப­தனை திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­து­விட்­டது.

    ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை மற்றும் விசா­ரணைக் குழு என்­ப­ன­வற்றை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிரா­க­ரித்­துள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசா­ர ணைக் குழு­வி­னரின் பரந்­து­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­மாட்டோம் என்று ஐ.நா.மனித உரிமைப் பேர­வைக்­கான வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருந்தார்.

    இந்­நி­லையில் இலங்கை விவ­காரம் தொடர்பில் சர்­வ­தேச மட்­டத்தில் பல நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் இலங்­கை­யிலும் உள்­நாட்டு ரீதியில் பல காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. குறிப்­பாக காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழுவின் ஆணை விரி­வு­ப­டுத்­தப்­பட்­ட­துடன் அதற்கு ஆலோ­சனை வழங்­க­வென மூன்று சர்­வ­தேச நிபு­ணர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

    இந்தக் குழு­விற்கு சேர் டெஸ்மன் டி சில்வா தலைமை தாங்­கு­கின்றார். இவ­ருடன் சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் டேவிட் க்ரேய்ன் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்­கின்­றனர். இது இவ்­வாறு இருக்க சர்­வ­தேச நிபுணர் குழுவின் எண்­ணிக்­கையை மூன்­றி­லி­ருந்து ஆறாக உயர்த்­து­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது. அந்த வகையில் இந்­தி­யா­வி­லி­ருந்து மனித உரிமை ஆர்­வலர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

    மேலும் ஜப்பான் மற்றும் பாகிஸ்­தா­னி­லி­ருந்து நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். இந்த புதிய மூன்று நிபு­ணர்கள் தொடர்­பான அறி­விப்பு வர்த்­த­மா­னியில் வெளி­வர ஏற்­பா­டா­கி­யுள்­ளது. அந்­த­வ­கையில் தற்­போது காணாமல் போனோர் தொடர்­பான ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சர்­வ­தேச நிபுணர் குழு­வினர் இலங்­கைக்கு வருகை தந்­துள்­ளனர்.

    அதன் தலைவர் டெஸ்மன்ட் டி. சில்­வா­வுடன் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக்ஷ்வல் பர­ண­கம பேச்­சுக்­களை நடத்­தி­யுள்ளார். தொடர்ந்தும் சில சந்­திப்­புக்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. காணாமல்போனோர் தொடர்­பான ஆணைக்­கு­ழு­வுக்­கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சர்­வ­தேச நிபுணர் குழு­வினர் என்ன செய்­வார்கள் என்­பது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள மெக்ஷ்வல் பர­ண­கம, சர்­வ­தேச நிபுணர் குழு­வினர் எமக்கு பல­வந்­த­மாக ஆலோ­ச­னை­களை வழங்க முடி­யாது.

    எமக்கு தேவை­யாயின் நாங்கள் ஆலோ­ச­னை­களை பெறுவோம். இது சுயா­தீன ஆணைக்­கு­ழு­வாகும் என்று குறிப்­பிட்­டுள்ளார். அதா­வது எந்­த­வொரு நிலை­யிலும் சர்­வ­தேச நிபுணர் குழு­வினர் விசா­ரணை செயற்­பா­டு­களில் பங்­கெ­டுக்க முடி­யாது என்­பதே ஆணைக்­கு­ழுவின் கருத்­தா­க­வுள்­ளது. அது மட்­டு­மன்றி புதிய ஆணைக்கு அமைய விசா­ரணை அமர்­வு­களும் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

    இந்­நி­லையில் எவ்­வா­றான ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­பட்­டாலும் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் சித­ற­டிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதில் அனைத்துத் தரப்­பி­னரும் கவனம் செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி தீர்­வுகள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

    குறிப்­பாக இதற்கு முன்­னரும் இவ்­வாறு பல ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் அமர்­வுகள் 2010 ஆம் ஆண்டு நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் நடை­பெற்­ற­போது அதில் சாட்­சி­ய­ம­ளித்த அதி­க­மான முக்­கி­யஸ்­தர்கள் ஆணைக்­கு­ழுக்கள் மீதான மக்­களின் நம்­பிக்­கை­யின்மை தொடர்­பாக பிரஸ்­தா­பித்­தி­ருந்­தனர்.

    எனவே ஆணைக்­கு­ழுக்­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் மக்­களின் மத்­தியில் நம்­பிக்­கைகள் ஏற்­படும் வகையில் அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் இடம்­பெ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையில் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் இன்னும் பல விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்வு காண­வேண்­டி­யுள்­ளது.

    குறிப்­பாக தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு குறித்து அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். கடந்­த­கால யுத்த நிலை­மைகள் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை கள் காலம்தாழ்த்­தப்­ப­டக்­கூ­டி­ய­வை­யல்ல. காணா­மல்­போனோர் தொடர்­பாக தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வுகள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

    பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது எதிர்­காலம் குறித்து நம்­பிக்கை வைக்­க­வேண்­டு­மாயின் அவர்­களின் எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும். வெறு­மனே ஆணைக்­கு­ழுக்­களை நிய­மித்து காலத்தை கடத்­து­வ­தற்கு எந்தத் தரப்பும் முயற்­சிக்­கக்­கூ­டாது. அதே­போன்று தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களும் உரிய முறையில் அர­சியல் இரா­ஜ­தந்­தி­ரங்கள் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும் அவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் முன்வரவேண்டும்.

    இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக் கப்படவேண்டும் என்பது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பிரதீபா மஹானாம ஹேவா இவ்வாறு தெரிவிக்கின்றார்.

    அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வைக் கண்டு உள்ளக செயற்பாட்டை முன்னெடுத்தால் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப் படவுள்ள விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கையை வலுவிழக்கச் செய்ய முடியும் என்று குறிப்பிடுகின்றார்.

    அத்துடன் தீர்வுத்திட்டத்துக்காக அதிகாரப் பகிர்வுக்கும் செல்லவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இராஜதந்திர நகர்வுகளும் காய்நகர்த்தல்க ளும் எவ்வாறு அமைந்தாலும் கடந்த காலயுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதிகிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டிருக்கின்றனர் என் பதனை எவரும் மறந்துவிடக்கூடாது.

    எனவே அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டியது அவசியமாகும். சர்வ தேச அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கு காய்நகர்த்தல்களை மேற்கொள்ளலாம். ஆனால் மறுபுறம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு அவர்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் அவசியமாகும்.

    -ரொபட் அன்­ட­னி– 

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஏட்டிக்குப்போட்டியாக தீவிரமடையும் நகர்வுகள் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top