புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில்
அந்தப் படத்துக்கும், அதில் பங்கேற்ற சீமானுக்கும் கண்டனம் தெரிவித்த மாணவர்களை இரும்புகளால் கடுமையாகத் தாக்கியதில் மாணவர்கள் பன்னிருவர் காயம் அடைந்திருப்பதாக தமிழக ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஜனநாயக ரீதியாக குரல் எழுப்பிய மாணவர்களை இலக்குவைத்து தயாராக வைத்திருந்த இரும்புக் கம்பிகளால் கண்மூடித்தனமான தாக்குதலில் மாணவர்களுக்கு தலையில் ரத்த காயம் ஏற்பநடத்தியட்டுள்ளது.
கை, கால்களிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமலேயே, ஜாம் பஜாரில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் காவலர்கள். பாலச்சந்திரனை சிறார் போராளியாகச் சித்தரிக்கும் “புலிப்பார்வை” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்தாலும், மதிமுக பொதுச் செயலர் வைகோ பங்கேற்கவில்லை. இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்து. எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் மற்றும் வேந்தர் மூவீஸ் உரிமையாளர் என்பதோடு மதனைப்பற்றி புகழும் பாரிவேந்தர் அந்த மகன் தனது மகன் என்பதை தெரிவிக்கவில்லை. இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இவர்தான்.
விழா நடந்து கொண்டிருக்கும் போதே, மாணவர்கள் சீமானை எதிர்த்து கோசம் எழுப்பினர். தங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். அதுமட்டுமல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்த சீமானை கைது செய்யுங்கள் என்றும் கோசம் எழுப்பினர்.
உடனே, இரும்புக் கம்பிகளுடன் தயாராக இருந்த கும்பல் ஓடிச் சென்று கேள்வி கேட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன், தமிழீழ மாணவர் பேரவையைச் சேர்ந்த செம்பியன் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக பி.பி.சி .தமிழோசை பேட்டியிலிருந்து
அரங்கில் இவ்வளவு கைகலப்பு நடந்தும், மேடையில் அமர்ந்திருந்த சீமான் உட்பட்டவர்கள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாதுகாப்புக்காக சென்றிருந்த பொலீசார் தலையிட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நின்றிருந்த மாணவர்களை கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர்.
அவர்களுக்கு முதலுதவி அளிக்காமலேயே ஜாம்பஜார் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாணவர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கத்தி திரைப்படம் தொடர்பிலான சிக்கல் இரண்டு தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி எனத் தெரிவித்துவரும் சீமான், சிங்கள இன அழிப்பாளர்களுக்கு உறுதுணையாக வெளிவரவிருக்கும் “புலிப்பார்வை’ படத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தமிழக மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
திருமாவளவன் கண்டனம்
புலிப்பார்வை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டணம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கை வருமறு:
தொல்.திருமாவளவன் அறிக்கை திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. புலிப்பார்வை என்னும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னை சத்தியம் திரையரங்கில் இன்று நடைபெற்றுள்ளது.
அந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், அத்திரைப்படம் குறித்துச் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அப்படக் குழுவினரும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் மாணவர்களை இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகள் போன்ற ஆயுதங்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலில் செம்பியன், மாறன், பிரதீப், பிரபா உள்ளிட்ட சிலர் மிகக் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பின்னர், தாக்குதலுக்குள்ளான மாணவர்களையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈழத்தில் தமிழின விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புவது, அண்மைக் காலமாக தமிழகத் திரைப்படத் துறையில் அதிகமாகி வருகிறது.
புலிப்பார்வை திரைப்படத்திலும் விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிக்கும் அத்தகைய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருந்தால், அத்தகைய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தைத் திரையிட வேண்டுமேயொழிய, அது பற்றிக் கேள்வி எழுப்புகிறவர்களை,
எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைத் தாக்குவது தமிழினத்திற்கு எதிரான போக்காகும்.
“மாணவ தம்பிகள் மீது தாக்குதல்: ரவிகரன் கண்டனம்!”
“தவறான கருத்தியலைக் கொண்ட படைப்புக்கு எதிராக தமது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்திய தமிழக மாணவ தம்பிகள் தாக்கப்பட்டது உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது” என்று இலங்கை வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:- இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் இடம் பெற்ற “புலிப்பார்வை” இசை வெளியீட்டு நிகழ்வில், ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்புக்களை காட்டச் சென்ற தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சியைத் தருகின்றது. மிக நெடிய காலமாக ஈழத் தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட இனஅழிப்பானது 2009-ல் உச்சத்தைத் தொட்டது.
இறுதிப் போரின் இறுதிக் கணங்களில் இடம் பெற்ற கொடூரமான சம்பவங்கள் காணொளி மற்றும் புகைப்பட பதிவுகளாக வெளிவந்து உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறன. அன்று வேடிக்கை பார்த்த உலகின் மனச்சாட்சியை இன்று தட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அதன் விளைவாக எழுந்த தமிழக மாணவர் எழுச்சி, தமிழின வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
இதன் விளைவாக, தமிழக மக்களின் உணர்வின் வெளிப்பாடாக தமிழக சட்டசபையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எண்ணிலடங்காத ஒப்பற்ற தியாகங்களால் கட்டி எழுப்பப்பட்ட தமிழரின் உரிமைப் போராட்டத்தின் நோக்கங்களை சிறுமைப்படுத்தும் வகையிலும், உலகின் மனச்சாட்சியைக் கேள்வி கேட்ட பல உண்மைப் பதிவுகளை செயலிழக்கச் செய்யும் வகையிலான காட்சிகள் “புலிப்பார்வை” திரைப்பட முன்னோட்டக் காட்சியில் இருந்தமை உலகத் தமிழினத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தொடர்ந்து, திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்வையிட்ட தமிழக மாணவர்கள் மற்றும் உணர்வாளர்களின் கருத்துக்கள் மூலம் அப்படைப்பு முற்றிலும் தவறான கருத்தியலால் புனையப்பட்டது என நிரூபணமாகியுள்ளது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தவறான கருத்தியலைக் கொண்ட படைப்புக்கு எதிராக தமது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்திய தமிழக மாணவ தம்பிகள் தாக்கப்பட்டது உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழர் விடிவு தொடர்பில் சமரசங்களை மறுத்து தன்னலன்களை வெறுத்து பிறர் இன்புற்றிருக்க போராடுகிற தமிழக மாணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். இவ்வாறு ரவிகரன் கூறியுள்ளார்.
மாணவர்களைத் தாக்கியமைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்
இது தொடர்பான முன்னைய பதிவு
பாலச்சந்திரன் படுகொலையை நியாயப்படுத்துகிறதா ‘புலிப்பார்வை‘ திரைப்படம்

நிகழ்வில் சீமானின் உரை

மே 17 இயக்கம் கடும் கண்டனம்!
தாக்குதலை கண்டித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் வெளியிட்ட கண்டன செய்தி :
ஈழ விடுதலை அரசியலுக்கு விரோதமான, இந்திய பார்ப்பனிய அரசின் ’விடுதலைபுலிகள் எதிர்ப்பு அவதூறு பிரச்சாரத்திற்கு’ துணை செய்யும் திரைப்படமாக அமைந்திருந்த “புலிப்பார்வை” எனும் மூன்றாம்தர திரைப்படைப்பிற்கு ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பினை பதிவு செய்த மாணவ தோழர்கள் மிக மோசமாக தாக்கப்பட்ட்தை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. அத்தோடு போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம். என்றும் தெரிவித்துள்ளனர்.