யாழ் கீரிமலை நகுலேஸ்வரத்துக்கு முன்பாக
உள்ள பொதுமக்களது காணியை சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்யவந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மக்களின் எதிர்ப்பை அடுத்து அளவீட்டுப் பணிகளை அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர். பொதுமக்கள் 21 பேருக்கு சொந்தமான 183 ஏக்கர் காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென காணி அளவீடு செய்ய இன்று அந்தப் பகுதிக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர்.
அதனை அறிந்த காணி உரிமையாளர்கள் அங்கு கூடி தமது எதிர்பபை வெளிப்படுத்தியதுடன் நாடாளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களின் கவனத்துக்கும் கொண்டுவந்தனர். சம்பவ இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோரும் , மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், அனந்தி சசிதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் உட்பட பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் சென்றனர்.
இதனால் காணி அளத்தலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை கடற்படையினர் மிரட்டினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது