சர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்தவின் மற்றய நாடகம் - TK Copy சர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்தவின் மற்றய நாடகம் - TK Copy

  • Latest News

    சர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்தவின் மற்றய நாடகம்


    காணாமற்போனோர் தொடர்பாக ஆராயும்
    ஜனாதிபதி விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச குற்றவியல் வழக்கு தொடுநர்களைக் கொண்ட ஆலோசனை சபையை ஜனதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.

    இது தொடர்பான விவரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

    அந்தச் சபையில் சர்வதேச போர்குற்றங்கள் தொடர்பில் வழக்கு தொடுநர்களாகவும், நீதிபதிகளாகவும் இருந்த மூன்றுபேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஆலோசனைச் சபையின் தலைவராக ராணி சட்டத்தரணி டெஸ்மன் டீ சில்வாவும், ராணி சட்டத்தரணி ஜெஃப்றி நைஸ், பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகிய இருவரும் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பிரித்தானிய சட்டவாளரும், சியராலியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த வழக்கில் ஐ.நாவின் தலைமை சட்டவாளராக பணியாற்றியவருமான, சேர் டெஸ்மன்ட் டி சில்வா இந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முன்னாள் யூகோஸ்லாவிய அதிபருக்கு எதிரான, அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடந்த போர்க்குற்ற வழக்கில் வாதாடியவரான பிரித்தானிய சட்ட நிபுணரும், சட்ட பேராசிரியருமான, சேர் ஜெப்ரி நைஸ் மற்றும், அமெரிக்காவின் சைராகியூஸ் பல்கலைக்கழக சட்ட பேராசிரியரான, டேவிட் கிறேன் ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை, அங்கோலா ஆகிய நாடுகளின் வழித்தோன்றலான டெஸ்மன் டீ சில்வா பிரிட்டனின் பிரபல சட்டத்தரணியாவார். ஸியாராலியோன் நாட்டின் மீதான ஐ.நா. யுத்தக்குற்ற விசாரணையின்போது இவர் பிரதான வழக்குத்தொடுநராகச் செயற்பட்டவர்.

    அத்துடன் இவரது மகன் பிரான்ஸ், சுவிற்ஸர்லாந்து நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகச் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லண்டனைச் சேர்ந்த ஜெஃப்றி நைஸ் முன்னாள் நீதிபதி.

    யூகோஸ்லாவிய முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான யுத்தக்குற்ற விசாரணையின்போது பிரதான வழக்குத்தொடுநராகச் செயற்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியான பேராசிரியர் டேவிட் கிரேன் ஸியாராலியோன் நாட்டின் மீதான ஐ.நா. யுத்தக்குற்ற விசாரணையின்போது பிரதான வழக்குத்தொடுநராகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    குற்றங்களை பூசி மெழுகுவதற்கு ஒத்துழைக்கப்போவதில்லை

    இந்த நிபுணர் குழுவில் ஒருவரான ஜெஃப்றி நைஸ் பி.பி.சி தமிழோசைக்கு கருத்துத் தெரிவித்தபோது நாம் இலங்கை நிபுணர் குழுவிற்கு ஆலோசனை வழங்குவது மட்டுமே அதனை ஏற்று செயற்படுவதும் விடுவதும் இலங்கை அரசை பொறுத்தது என்றும் தெரிவித்தார்.

    இலங்கையின் கறைகளை பூசி மெழுகும் செயற்பாடாக இது இருக்கும் என்று பி.பி.சி தமிழோசை கேட்டபோது கருத்து தெரிவித்த ஜெஃப்றி நைஸ் தாம் ஒருபோதும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் அது போலவே மற்றய இருவரும் எனவும் தெரிவித்தார்.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்தவின் மற்றய நாடகம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top