நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்மாடாமில்
இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக பயணிகள் விமானம் நேற்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் வந்தது என புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஏ.ஐ. 113 என்ற அந்த விமானம் 126 பயணிகளுடன் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரிலிருந்து போர் நடந்துவரும் உக்ரைன் வழியாக டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது.
மோடி தப்பினார்
உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்த அதே வான்வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டை முடித்துவிட்டு பிரேசிலில் இருந்து திரும்பி வருவதாக இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டபடி வந்திருந்தால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 1 மணி நேரத்தில் மோடியின் விமானமும் உக்ரைன் ஃபிளைட் இன்ஃபர்மேஷன் ரீஜினில் பறந்திருக்கும் என கூறப்படுகிறது.
எனினும் உக்ரைனில் போர் ஏற்பட்டவுடனே அதன் வான்வெளியில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு விமானிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக ஏர்-இந்தியா நிறுவனத்தின் இயக்குனரான எஸ்.பி.எஸ் சூரி கூறியுள்ளார்.
இனி உக்ரைன் நாட்டின் ஒட்டு மொத்த வான்வெளி பகுதியையே தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விமானத்தில் பயணம் செய்த 15 ஊழியர்களும், 280 பயணிகளும் உடல்கருகி உயிரிழந்தனர்.
இந்தியப் பயணிகள் எவரும் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்று மத்திய விமானப்போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி அதேசமயம் ஊழியர்களில் மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழரான பிரமீளா என்ற ஏர்ஹோஸ்டஸ் இந்த விமானத்தில் பயணித்து பலியாகியுள்ளார்.
அதே போல 41 வயதான சஞ்சித் சிங் சந்து என்ற இந்திய வம்சாவளி சீக்கிய ஊழியரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்.
நெதர்லாந்து பயணிகள்
விமானத்தில் பயணம் செய்த 280 பயணிகளில் 154 பேர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா பயணிகள்
இவர்கள் தவிர 27 ஆஸ்திரேலியப் பயணிகள்,
23 மலேசியப் பயணிகள்,
11 இந்தோனேசியப் பயணிகள்,
6 இங்கிலாந்து பயணிகள்,
4 பெல்ஜியம் பயணிகள்,
3 பிலிப்பைன்ஸ் பயணிகள் மற்றும் ஒரு பயணி ஆகியோரும் இதில் அடங்குவர்.
அடையாளம் தெரியாத 47 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 47 பயணிகளின் விவரம் இதுவரை சரிவர தெரியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மலேசியாவுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது !
முன் நாள் விடுதலைப் புலிகள், இலங்கையில் இருப்பதால் ஆபத்து என்று கருதி மலேசியா போன்ற நாடுகளில் சென்று தஞ்சமடைந்து வேலைசெய்து தமது வாழ்க்கையை கழித்து வந்த அப்பாவி தமிழர்களை இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் மலேசிய பொலிசார் அவர்களில் பலரை பிடித்து இலங்கைக்கு அனுப்பியது.
இலங்கை சென்றால் இலங்கை இராணுவம் அவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கும், அவர்கள் படுகொலை கூட செய்யப்பட்டலாம் என்று பல அமைப்புகள் சுட்டிக்காட்டியது.
ஆனால் அவை எதனையும் மலேசிய கருத்தில் கொண்டதே இல்லை. ஈழத் தமிழர்களை ஒரு எதிர்கள் போல நடத்தினார்கள். மலேசிய அரசின் செயலால் அல்லலுற்ற தமிழர்களின் சாபம் இன்று பலித்தது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைத் தமிழர்கள் மலேசிய அரசுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையில் ஈடுபட வில்லை. ஆனால் அவர்களை பிடித்து மற்றும் ஒடுக்கவேண்டும் என்று மலேசிய அரசி கங்கணம் கட்டி அலைந்தது . ஆனால் உண்மையான எதிரி யார் என்பதனை அவர்கள் கண்டுகொள்ள தவறிவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.
ஐ.நா. பொதுக்குழு இன்று அவசர கூட்டம்
உக்ரைனில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு இன்று அவசரமாக கூடுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த பாதுகாப்பு கவுன்சில் முன்மொழிந்துள்ளது.
இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக பயணிகள் விமானம் நேற்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் வந்தது என புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஏ.ஐ. 113 என்ற அந்த விமானம் 126 பயணிகளுடன் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரிலிருந்து போர் நடந்துவரும் உக்ரைன் வழியாக டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது.
மோடி தப்பினார்
உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்த அதே வான்வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டை முடித்துவிட்டு பிரேசிலில் இருந்து திரும்பி வருவதாக இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டபடி வந்திருந்தால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 1 மணி நேரத்தில் மோடியின் விமானமும் உக்ரைன் ஃபிளைட் இன்ஃபர்மேஷன் ரீஜினில் பறந்திருக்கும் என கூறப்படுகிறது.
எனினும் சாதுர்யமாக யோசித்து பைலட் பயணத் தடத்தை மாற்றியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஏர் இந்தியா-001 விமானம் பிராங்ஃப்ர்ட் நகரில் இருந்து க்ரீன்வீச் நேரப்படி 11.22 க்கு புறப்பட்டது..
எனினும் உக்ரைனில் போர் ஏற்பட்டவுடனே அதன் வான்வெளியில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு விமானிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக ஏர்-இந்தியா நிறுவனத்தின் இயக்குனரான எஸ்.பி.எஸ் சூரி கூறியுள்ளார்.
இனி உக்ரைன் நாட்டின் ஒட்டு மொத்த வான்வெளி பகுதியையே தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விமானத்தில் பயணம் செய்த 15 ஊழியர்களும், 280 பயணிகளும் உடல்கருகி உயிரிழந்தனர்.
இந்தியப் பயணிகள் எவரும் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்று மத்திய விமானப்போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி அதேசமயம் ஊழியர்களில் மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழரான பிரமீளா என்ற ஏர்ஹோஸ்டஸ் இந்த விமானத்தில் பயணித்து பலியாகியுள்ளார்.
அதே போல 41 வயதான சஞ்சித் சிங் சந்து என்ற இந்திய வம்சாவளி சீக்கிய ஊழியரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்.
நெதர்லாந்து பயணிகள்
விமானத்தில் பயணம் செய்த 280 பயணிகளில் 154 பேர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா பயணிகள்
இவர்கள் தவிர 27 ஆஸ்திரேலியப் பயணிகள்,
23 மலேசியப் பயணிகள்,
11 இந்தோனேசியப் பயணிகள்,
6 இங்கிலாந்து பயணிகள்,
4 பெல்ஜியம் பயணிகள்,
3 பிலிப்பைன்ஸ் பயணிகள் மற்றும் ஒரு பயணி ஆகியோரும் இதில் அடங்குவர்.
அடையாளம் தெரியாத 47 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 47 பயணிகளின் விவரம் இதுவரை சரிவர தெரியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மலேசியாவுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது !
இலங்கை சென்றால் இலங்கை இராணுவம் அவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கும், அவர்கள் படுகொலை கூட செய்யப்பட்டலாம் என்று பல அமைப்புகள் சுட்டிக்காட்டியது.
ஆனால் அவை எதனையும் மலேசிய கருத்தில் கொண்டதே இல்லை. ஈழத் தமிழர்களை ஒரு எதிர்கள் போல நடத்தினார்கள். மலேசிய அரசின் செயலால் அல்லலுற்ற தமிழர்களின் சாபம் இன்று பலித்தது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைத் தமிழர்கள் மலேசிய அரசுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையில் ஈடுபட வில்லை. ஆனால் அவர்களை பிடித்து மற்றும் ஒடுக்கவேண்டும் என்று மலேசிய அரசி கங்கணம் கட்டி அலைந்தது . ஆனால் உண்மையான எதிரி யார் என்பதனை அவர்கள் கண்டுகொள்ள தவறிவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.
ஐ.நா. பொதுக்குழு இன்று அவசர கூட்டம்
உக்ரைனில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு இன்று அவசரமாக கூடுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த பாதுகாப்பு கவுன்சில் முன்மொழிந்துள்ளது.
தொடர்புபட்ட செய்தி