கடற்படைச் சிப்பாய் ஒருவரால் 11 வயதுச் சிறுமி
ஒருவர் இரகசியமான முறையில் சில நாட்களாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என ஊர்காவற்றுறை பொலிஸில் சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் காரைநகர் ஊரிக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. குறித்த சிறுமி சில நாட்களாக பாடசாலைக்கு வருகை தரவில்லை எனப் பெற்றோருக்கு பாடசாலை நிர்வாகம் தெரியப்படுத்தியதை அடுத்தே இந்த விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
குறித்த சிறுமி பாடசாலைக்கு செல்லும் வழியில் கடற்படை முகாம் அமைந்துள்ளது. அங்கு கடமையில் இருக்கும் சிப்பாய் ஒருவரே குறித்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படுகின்றது.
சிறுயை தொடர்ச்சியாக அச்சுறுத்தி 11 தினங்களாக அந்தச் சிப்பாய் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்றும், இது தொடர்பாக எவருக்கும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டினார் எனவும் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
எனினும் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கடற்படைச் சிப்பாய் தற்போது முகாமில் இல்லை எனவும் ஓரிரு தினங்களுக்கு முன்னரே இடம் மாற்றலாகிச் சென்று விட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது. சிப்பாயால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதே சமயம் குறித்த சிறுமியுடன் பாடசாலைக்கு சென்று வந்த, அவரின் சகோதரியின் 9 வயது மகளையும் குறித்த சிப்பாய் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறார் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. தற்போது அவரும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்செய்தி வெளியாகும் வரை குறித்த கடற்படை சிப்பாய் நீதிமன்றினில் காவல்துறையால் ஆஜர்படுத்தப்பட்டிருக்கவில்லை.
விடயத்தை முடக்கிவிட உயர்மட்டத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.