மாகாண முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு வேலைப்பளு காரணமாக தன்னால் கலந்துகொள்ள முடியாதுள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் 12 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியுடன் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் பத்து விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. ஆனால் இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களில் ஏதாவது ஒன்றுக்காவது தனது அனுசரணையைத் தந்திருந்தால் எங்களுக்கு வசதியாக இருந்திருக்கும்.
நான் வசதி என்ற சொல்லை தான் கூறுகின்றேன். ஆனால் அதுகூட இன்னும் செய்துதரப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் சில விடயங்களைக் குறிப்பிட்டோ அல்லது அதற்கு மாறாகவோ நாம் செயற்படவில்லை.
ஏற்கனவே தமக்கு உறுதியளித்தபடி வடக்கின் ஆளுநர் சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமிப்பதில்லை என்று ஜனாதிபதி தமக்கு உறுதியளித்திருந்தார். எனினும் தற்போது அதனை அவர் மீறிவிட்டார் என்று விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே அவருடைய அமைச்சரவை பகிஸ்கரிப்பு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர்களுக்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டிருந்தது. ஆனால், எனக்கு அக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
கடந்த வாரம் முதலமைச்சர்களுக்கு கூட்டம் இடம்பெறவுள்ளதாக கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள் அக்கூட்டம் நடைபெறும் என திகதி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் எனக்குப் பல வேலைகளும் கடமைகளும் இருப்பதால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என கடிதம் அனுப்பியிருக்கின்றேன்.
ஆகவே, எங்களுக்குள்ளே அது சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதைப் போல் நாங்களும் ஒத்துப்போகின்றோம். ஆனால் எங்களுக்குக் கூறுகின்ற எந்தவொரு விடயமும் செய்துதரப்படவில்லை என்றார்.