நேரடிப்பேச்சுக்கு தயாரா? விட்டுக்கொடுக்கப்போவது யார் ? - TK Copy நேரடிப்பேச்சுக்கு தயாரா? விட்டுக்கொடுக்கப்போவது யார் ? - TK Copy

  • Latest News

    நேரடிப்பேச்சுக்கு தயாரா? விட்டுக்கொடுக்கப்போவது யார் ?


    நாட்டில் புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு
    அர­சியல் தீர்வு ஒன்றை காண்­ப­தற்­கான செயற்­பா­டு­களின் தீர்க்­க­மான கட்­டத்தில் மற்­று­மொரு அத்­தி­யாயம் வர­லாற்­றுடன் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

    இம்­முறை அரங்­கேற்­றப்­பட்­டுள்ள இந்த குறு­கிய கால செயற்­பாட்டில் வர­லா ற்றில் கடும் முட்கள் நிறைந்த பாதையில் பய­ணித்து விடிவை எட்­டிய தென்­னா­பி­ரிக்கா முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை வகித்­துள்­ளது.

    ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வை­யினால் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­கான விசா­ரணைக் குழுவும் நிபுணர் குழுவும் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் விசா­ர­ணைகள் குறித்த அழுத்­தங்கள் அதி­க­ரித்­துள்ள பின்­ன­ணி­யிலும் தென்­னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­ப­தியின் இலங்கை விஜயம் இவ்­வாரம் இடம்­பெற்­றுள்­ளது.

    ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­க­ளான தேசிய சுதந்­திர முன்­னணி மற்றும் ஜாதிக ஹெல உறு­மய ஆகிய கட்­சி­களின் கடும் எதிர்ப்­புக்கு மத்­தியில் தென்­னா­பி­ரிக்க பிர­தி­நி­தி­களின் இலங்கை விஜயம் இடம்­பெற்­றுள்­ளது.

    கடந்த திங்­கட்­கி­ழமை இலங்­கைக்கு வந்த தென்­னா­பி­ரிக்க பிர­தி­நி­திகள் குழுவில் சிறில் ரம­போ­ஷா­வுடன் அந்­நாட்டின் முன்னாள் பிர­தி­யமைச்சர் இப்­ராஹிம் இஸ்மாயில் இப்­ராஹிம், மதிப்­பீடு கண்­கா­ணிப்பு மற் றும் சாதனை தொடர்­பான பிர­தி­ய­மைச்சர் ஒபீட் போபிலா, நெல்சன் மண்­டே­லாவின் அமைச்­ச­ர­வையில் உறுப்­பி­ன­ராக இருந்த ரோல்ப் மேயர் மற்றும் ஐவர் ஜென்கின்ஸ் ஆகியோர் இடம்­பெற்­றி­ருந்­தனர்.

    இலங்கை வந்த குழு­வினர் முதல் சந்­திப்­பா­கவே அரச தரப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினர். அரச தரப்பில் அர­சாங்­கத்தின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், வெளி­வி­வ­கார அமைச்சின் கண்­கா­ணிப்பு உறுப்­பினர் சஜின் வாஸ் குண­வர்த்­தன, நீர்ப்­பா­சன முகா­மைத்­துவ அமைச்சர் நிமால் சிறி­பால டி.

    சில்வா, நீதி­ய­மைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முத­லீட்டு ஊக்­கு­விப்பு பிர­தி­ய­மைச்சர் பைஸர் முஸ்­தபா, சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட அமைப்­பாளர் அருண் தம்­பி­முத்து உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டனர். தென்­னா­பி­ரிக்க பிர­தி­நி­திகள் குழு­வுக்கும் அரச தரப்பு பிர­தி­நி­திகள் குழு­வுக்கும் இடை­யி­லான சந்­திப்­பின்­போது அர­சியல் தீர்வு விவ­காரம் விரி­வாக பேசப்­பட்­டுள்­ளது.

    குறிப்­பாக தீர்வு தொடர்­பி­லான அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்­பது இதன்­போது தென்­னா­பி­ரிக்க குழு­வி­ன­ருக்கு அரச தரப்பு பிர­தி­நி­தி­க­ளினால் தெளி­வாக விளக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. விசே­ட­மாக தீர்­வுக்­கான இணக்­கப்­பாட்டை அடை­வ­தற்­கான பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு குறித்து இதன்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

    மேலும் போருக்குப் பின்­ன­ரான நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் தொடர்­பா­கவும் தென்­னா­பி­ரிக்­காவில் முன்­னெ­டுக்­கப்­பட்ட உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு தொடர்­பா­கவும் விரி­வான பேச்­சுக்கள் இந்த சந்­திப்­பின்­போது இடம்­பெற்­றுள்­ளன.

    தென்­னா­பி­ரிக்­காவில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தைப்­போன்ற உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு ஒன்றின் அனு­ப­வங்­களை பகிர்­வது குறித்தும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. அரச தரப்­புக்­க­ளு­ட­னான சந்­திப்பின் பின்னர் ரம­போஷா குழு­வினர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் இரவு விருந்­து­ப­சா­ரத்தில் கலந்­து­கொண்­டனர்.

    இதன்­போதும் ரம­போ­ஷா­வுக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடை யில் கலந்­து­ரை­யாடல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சுக்­க­ளுக்குத் தயாரா என்று ரம­போஷா ஜனா­தி­ப­தி­யிடம் வின­வி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

    இதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி பேச்­சு­வார்த்­தைக்கு சிறந்த இட­மாக தெரி­வுக்­கு­ழுவே உள்­ளது. இதன்­மூ­லமே சகல தரப்­புக்­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வைக்­காண முடியும் என்று பதி­ல­ளித்­துள்ளார். ஆனால் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் செயற்­பா­டு­க­ளையும் கூட்­ட­மைப்­ பு­ட­னான நேரடிப் பேச்­சுக்­க­ளையும் சமாந்­த­ர­மாக கொண்டு நடத்த தயாரா என்று ரம ­போஷா வின­வி­ய­போது அது குறித்து சிந்­திக்­க­வேண்டும் என்று ஜனா­தி­பதி குறிப்­பிட் டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

    இந்­நி­லையில் மறுநாள் செவ்­வாய்க்­கி­ழமை காலை ரம­போஷா குழு­வினர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். இந்தப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது தீர்வு விவ­காரம் குறித்து நீண்­ட­நேரம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

    குறிப்­பாக யுத்­தத்­தின பின்­ன­ரான நிலை­மைகள் தீர்வு செயற்­பாட்டின் தற்­போ­தைய நிலை என்­பன குறித்து விரி­வாக பேசப்­பட்­டுள்­ளது. உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பங்­கேற்­பதன் சிக்கல் குறித்தும் ரம­போ­ஷா­வுக்கு எடுத்­துக்­கூ­ற­ப்­பட்­டுள்­ளது.

    ஆனால் தென்­னா­பி­ரிக்­காவின் உத­வி­யு­ட­னான அர­சியல் தீர்வு செயற்­பா­டு­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்பை வழங்கத் தயார் என கூட்­ட­மைப்­பினர் ரம­போ­ஷா­விடம் உறு­தி­ய­ளித்­துள்­ளனர். இந்­நி­லையில் யாழ்ப்­பா­ணத்­துக்கு சென்று வட மாகாண ஆளு­ந­ரையும் முத­ல­மைச்­ச­ரையும் சந்­தித்து விட்டு கொழும்பு திரும்­பிய ரம­போஷா குழு­வினர் செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் அவ­ச­ர­மாக நாடு திரும்­பினர்.

    தென்­னா­பி­ரிக்க ஜனா­தி­பதி ஜேக்கப் சூமா சுக­வீ­ன­முற்­றி­ருப்­பதால் தற்­போது பதில் ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் ரம­போஷா அந்­நாட்டின் அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு தலை­மை­தாங்­க­வேண்­டி­யி­ருந்ததால் இவ்­வாறு ரம­போஷா குழு­வினர் குறு­கி­ய­கால விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பினர்.

    அந்­த­வ­கையில் தென்­னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­பதி ரம­போஷா தலை­மை­யி­லான குழு­வி­னரின் இலங்கை விஜ­யமும் இரண்டு தரப்­புக்­க­ளு­ட­னான சந்­திப்­புக்­களும் அர­சியல் தீர்வு செயற்­பாட்டில் எவ்­வா­றான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது குறித்து நாம் சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது.

    வர­லாற்றில் மேற்­கொள்­ளப்­பட்ட பல்­வேறு முயற்­சி­களை போன்று இதுவும் ஒரு முயற்சி மட்­டும்­தானா அல்­லது அத­னையும் தாண்டி தமிழர் பிரச்­சி­னைக்கு நியா­ய­மான அர­சியல் தீர்வு ஒன்றை பெறு­வ­தற்­கான வழியை ஏற்­ப­டுத்­துமா என்­பதே தற்­போ­தைய நிலை­மையில் அனைவர் மத்­தி­யிலும் எழுந்­துள்ள கேள்­வி­யா­க­வுள்­ளது. 

    சிறில் ரம­போ­ஷாவின் வருகை தீர்வை விரும்பும் மக்கள் மத்­தியில் பாரிய எதிர்ப்­பார்ப்­பையும் நல்­லெண்­ணத்­தையும் தோற்­று­வித்­தி­ருந்­தது. அர­சாங்­கத்­துக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான முறி­வ­டைந்­து­போ­யுள்ள தீர்வு தொடர்­பான பேச்­சுக்­களை மீள ஆரம்­பிப்­ப­தற்கு தென்­னா­பி­ரிக்­காவின் மத்­தி­யஸ்­தமும் சிறில் ரம­போ­ஷாவின் வரு­கையும் வழி வகுக்கும் என்­பதே இந்த எதிர்­பார்ப்­பாக இருந்­தது.

    ஆனால், மிகவும் குறு­கிய கால விஜ­யத்­தினை மேற்­கொண்டு இலங்கை வந்த ரம­ போஷா தலை­மை­யி­லான குழு­வினர் அர­சாங்கத் தரப்பு எதிர்த்­த­ரப்பு மற்றும் கூட்­ட­மைப்பு பிர­தி­நி­தி­களை மட்டும் சந்­தித்து விட்டு சென்­றுள்­ளனர்.

    இந்­நி­லையில் தென்­னா­பி­ரிக்க தூதுக்­கு­ழு­வினர் மேற்­கொண்ட சந்­திப்­புக்­க­ளின்­போது தீர்வு குறித்த ஏதா­வது சாத­க­மாக கருத்­துக்­களோ தோற்­றப்­பா­டு­களோ முன்­வைக்­கப்­பட்­டதா? என்ற கேள்­விக்கு எமக்கு இது­வரை பதில் கிடைக்­க­வில்லை. அரச தரப்­பு­ட­னான சந்­திப்­பின்­போது அர­சாங்கம் தமது நிலைப்­பாட்டை தெரி­வித்­துள்­ளது.

    தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்­பின்­போது கூட்­ட­மைப்பு தனது நிலைப்­பாட்டை தெளி­வாக குறிப்­பிட்­டுள்­ளது. இந்­நி­லையில் அடுத்­தக் ­கட்ட நகர்­வுகள் மற்றும் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றன என்று பார்க்­க­வேண்டும்.

    பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வையும் வைத்­துக்­கொண்டு சமாந்­த­ர­மாக கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சுக்­களை நடத்த முடி­யுமா? என்று ரம­போஷா ஆளும் தரப்­பிடம் எழுப்­பி­யுள்ள கேள்­வி­யா­னது தீர்வு விட­யத்தில் ஆரோக்­கி­ய­மான நிலைமை உரு­வாகும் என்ற எண்­ணத்தை ஓர­ளவு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதா­வது அவர் புதிய அணு­கு­முறை ஒன்­றுக்கு முயற்­சித்­துள்­ளமை தெளி­வா­கின்­றது. 

    எனினும் ரம­போ­ஷாவின் விஜ­யத்தின் பின்னர் அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெ­லவின் கருத்து இந்த எண்­ணத்தில் சிக்கல் நிலையை தோற்­று­வித்­துள்­ளது என்று கூறலாம். அதா­வது தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சியல் தீர்வு ஒன்றை அடை­வ­தற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கு இருக்­கின்­றது.

    ஆனால் அத­னை­விட பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு இருக்­கின்­றது. எனவே தீர்வு விட­யத்தில் கூட்­ட­மைப்பே தனது நிலைப்­பாட்­டி­லி­ருந்து இறங்­கி­வ­ர­வேண்­டி­யுள்­ளது என குறிப்­பி­டு­கின்றார். அதா­வது கூட்­ட­மைப்பே தனது நிலைப்­பாட்­டி­லி­ருந்து இறங்­கி­வர முடி­யாது என்று கூறிக்­கொண்­டி­ருக்­கையில் அனைத்து இன மக்கள் குறித்தும் பொறுப்­புக்­கூ­றக்­கூ­டிய அர­சாங்கம் எவ்­வாறு இறங்கிச் செல்­வது என்றும் அமைச்சர் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்றார். 

    குறிப்­பாக கூட்­ட­மைப்­புடன் மட்டும் இரு­த­ரப்பு பேச்­சுக்­களை அர­சாங்கம் நடத்­தினால் ஏனைய சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு அரசாங்கம் அநீதி இழைப்­ப­தாக அமைந்­து­விடும். குறிப்­பாக முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும் மலை­யக அர­சியல் கட்­சி­களும் இந்த விடயம் தொடர்பில் அர­சாங்­கத்­திடம் கேள்வி எழுப்­பினால் எவ்­வாறு பதி­ல­ளிப்­பது? என்று அமைச்சர் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்றார்.

    தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு ஒன்றை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் என்ற உணர்வும் பொறுப்பும் எங்­க­ளுக்கு இருக்­கின்­றது. அதனை நாங்கள் மறுக்­க­வில்லை. ஆனால் எங்­க­ளை­விட அதி­க­மாக கூட்­ட­மைப்­புக்கு இந்த உணர்வும் அக்­க­றையும் இருக்­க­வே­ணடும் என்று அமைச்சர் கூறு­கின்றார்.

    அமைச்­சரின் கருத்தைப் பார்க்­கும்­போது அர­சாங்கம் ஒரு­போதும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் தனித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்த விரும்­ப­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது. இந்­நி­லையில் தென்­னா­பி­ரிக்­காவின் மத்­தியஸ்­தத்­து­ட­னான நகர்­வுகள் வெற்­றி­ய­ளிக்­குமா என்ற கேள்வி எழு­கின்­றது. எவ்­வா­றெ­னினும் தென்­னா­பி­ரிக்­காவின் இந்த உத­வியும் அனு­பவப் பகிர்வும் வெற்­றி­ய­ளிக்­குமா? என்று தற்­போது எதிர்வு கூறமுடி­யாது. அதற்கு நாம் முயற்­சிக்­க­வு­மில்லை.

    ஆனால் அர­சாங்கம் கூட்­ட­மைப்­புடன் தனித்து பேச்சு நடத்­த­மாட்டோம் என்று அடம்­பி­டிக்­கும்­போது எவ்­வாறு தீர்வு முயற்­சிகள் சாத்­தி­ய­மாகும் என்­பதே எமது முன்­னுள்ள முரண்­பா­டான நிலை­யா­க­வுள்­ளது. கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை இரு­த­ரப்பு பேச்­சுக்­க­ளின்­போது இணக்­கப்­பாட்­டுக்கு வந்­த­வாறு அர­சாங்­கமும் கூட்­ட­மைப்பும் பேச்சு நடத்தி அத­ன­டிப்­ப­டையில் எட்­டப்­ப­டு­கின்ற உடன்­பாட்டின் அடிப்­ப­டையில் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரு­வது குறித்து சிந்­திக்க முடியும் என்று கூறு­கின்­றது.

    இவ்­வாறு இரண்டு தரப்­புக்கள் மத்தி­யிலும் எதிரும் புதி­ரு­மான நிலைப்­பா­டுகள் இருக்­கையில் தென்­னா­பி­ரிக்­காவின் மத்­தி­யஸ்தம் எந்­த­ளவு தூரம் தமிழ் மக்­க­ளுக்கு தீர்வைப் பெற்­றுத்­தரும் என்று பார்க்­க­வேண்டும். இந்­நி­லையில் அன்று முதல் தீர்வு குறித்தும் அதி­காரப் பகிர்வு தொடர்­பா­கவும் குரல் கொடுத்­து­வரும் அமைச்சர் ராஜித்த சேனா­ரட்ன ரம­போ­ஷாவின் விஜயம் மற்றும் தென்­னா­பி­ரிக்­காவின் மத்­தி­யஸ்தம் குறித்து இவ்­வா­றான கருத்தை வெளி­யி­டு­கின்றார்.

    அதா­வது ரம­போஷா என்­பவர் தென்­னா­பி­ரிக்­காவின் முக்­கிய அர­சியல் தலைவர் அவர் போன்ற ஒரு இரா­ஜ­தந்­தி­ரி­யுடன் இலங்கை அர­சாங்கம் தொடர்­பு­களை பேணு­ வ­தா­னது மிகவும் சிறப்பு வாய்ந்த விட­ய­மாக அமையும். குறிப்­பாக ரம­போஷா நெல்சன் மண்­டேலா காலத்தில் மிகவும் வலு­வாக செயற்­பட்ட ஒரு­வ­ராவார்.

    எனவே இந்த முயற்சி தீர்வு விட­யத்தில் சிறந்த பலனைத் தரும் என்று நாம் நம்­பலாம். எனினும் நிலை­மைகள் எவ்­வாறு அமை­கின்­றன என்று பார்க்­க­வேண்டும் என்று கூறு­கின்றார். நிலைமைகள் எவ்வாறு அமையும் என்று பார்க்க வேண்டும் என்று கூறு­வ­தி­லி­ருந்து அமைச்­சரின் எண்­ணத்­திலும் சிறு தளர்வை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

    கடந்த கால அனு­ப­வங்­களை வைத்து அவர் அவ்­வாறு கூறி­யி­ருக்­கலாம். இது இவ்­வாறு இருக்க அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரி­லேயே தென்­னா­பி­ரிக்­காவின் விசேட பிர­தி­நிதி நிய­மிக்­கப்­பட்­ட­துடன் தூதுக்­கு­ழுவின் விஜ­யமும் அமைந்­தது. ஆனால் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்­திர முன்­னணி மற்றும் ஜாதிக்க ஹெல உறு­மய என்­பன தென்­னா­பி­ரிக்­காவின் மத்­தி­யஸ்­தத்தை கடு­மை­யாக விமர்­சித்­தன.

    எனினும் அந்த எதிர்ப்­புக்­களை மீறி ரம­போஷா தலை­மை­யி­லான குழு­வி­னரின் விஜயம் அமைந்­தது. ஆனால் பங்­காளிக் கட்­சி­களின் எதிர்ப்­புகள் குறித்து ரம­போஷா தரப்பு கவ­லையும் வெளி­யிட்­டி­ருந்­தது. தாங்கள் அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரி­லேயே இலங்­கைக்கு வருகை தந்­துள்­ள­தாக ரம­போஷா குழு தெரி­வித்தும் இருந்­தது.

    இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்கள் பலரும் தென்­னா­பி­ரிக்­காவின் செயற்­பாட்டை தீர்வு முயற்­சியில் மூன்றாம் தரப்பு அல்ல என்­ப­தனை அழுத்தம் திருத்­த­மாக கூறி­வ­ரு­கின்­றனர். உதா­ர­ண­மாக அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும இந்த விடயம் குறித்து இவ்­வாறு தெரி­விக்­கின்றார்.

    அதா­வது ரம­போஷா மூன்றாம் தரப்­பாக இலங்கை வரு­வ­தாக கூறப்­ப­டு­வது ஊட­கங்கள் உரு­வாக்­கிய கதை­யாகும். தென்­னா­பி­ரிக்க பிர­தி­நிதி சிறில் ரம­போஷா மூன்றாம் தரப்­பாக வரு­ப­வ­ராக கூறி­யுள்­ளாரா? இல்லை. தென்னாபிரிக்க அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கூறவுமில்லை. ஊடகங்கள் இது தொடர்பில் கதையை உருவாக்கியுள்ளன என்று அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

    தென்னாபிரிக்கா தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வரும்போது நாம் புறந்தள்ள முடியாது. மூன்றாவது தரப்பு என்று கூறும்போது நோர்வே நினைவுக்கு வருகின்றது. ஆனால் இந்த செயற்பாட்டுடன் நோர்வேயை சம்பந்தப்படுத்த முடியாது. இது அவ்வாறானதாக இல்லை. உள்நாட்டு மோதலின் பின்னர் வெற்றிகரமான முறையில் சமாதானத்தை அடைந்த நாடு என்ற வகையில் தென்னாபிரிக்காவிடம் சமாதான செயற்பாடுகள் தொடர்பில் கற்கவேண்டிய விடயங்கள் எமக்கு அதிகமாகவே உள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

    இந்நிலையில் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு செயற்பாட்டில் இவ்வாறு அவ்வப்போது தீர்க்கமான நகர்வுகள் இடம்பெறுவது போன்ற தோற்றப்பாடுகள் காணப்பட்டாலும் இறுதியில் தோல்வி கண்ட வரலாற்றையே நாம் கொண்டுள் ளோம். அரசாங்கத்துக்கும் தமிழர் தரப்புக் கும் இடையிலான திம்பு பேச்சுவார்த்தை முதல் ஒஸ்லோப் பேச்சுவார்த்தை வரை எதுவுமே வெற்றிபெறும் பாதையை நோக்கி நகரவில்லை.

    இருதரப்பு இணக் கப்பாடுகள் எட்டப்படும் சாத்தியங்கள் பல சந்தர்ப்பங்களில் தென்பட்டபோதும் தமிழ் மக்களின் துரதிர்ஷ்டவசமான நிலையாக எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. எவ்வாறெனினும் தற்போதைய தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்துடனாவது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்பதே தமிழ் பேசும் மக்க ளின் பாரிய எதிர்பார்ப்பாகவுள்ளது என்பதனை யாரும் மறுக்க முடியாது.


    –ரொபட் அன்டனி–


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: நேரடிப்பேச்சுக்கு தயாரா? விட்டுக்கொடுக்கப்போவது யார் ? Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top