ஈபிஆர்எல்எப் சுரேஷ் அணியின் 34ஆவது மாநாடு (படங்கள்) - TK Copy ஈபிஆர்எல்எப் சுரேஷ் அணியின் 34ஆவது மாநாடு (படங்கள்) - TK Copy

  • Latest News

    ஈபிஆர்எல்எப் சுரேஷ் அணியின் 34ஆவது மாநாடு (படங்கள்)


    வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில்
    ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சுரேஷ் அணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் 34வது தேசிய மாநாடு நேற்றைய தினம் யாழ். இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்றிருந்தது.

    இதில் முக்கிய தீர்மானங்கள் 14 எடுக்கப்பட்டிருந்தன. அவற்றை அறிவிப்பதற்கும், மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்குமான 2ம் நாள் அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் சிங்கள முற்போக்கு கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 



    இன்றைய 2ம் நாள் அமர்வில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட மக்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கட்சிகளின் தலைவர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், சிறப்பு உரைகளையும் நிகழ்த்தியிருந்தனர். நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனால் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் 46 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

    இதில் இராணுவ க்கிரமிப்புக்கள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், அரசியல் நடவடிக்கைகளில் உண்டாக்கப்படும் குழப்பங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும் நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியம் தொடர்பில் உரையாற்றியிருந்தார்.

    தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம் மக்களுடைய விருப்பங்களுக்கு மாறாக செயற்படுகின்றார்கள் என உரையாற்றியிருந்தார்.











    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஈபிஆர்எல்எப் சுரேஷ் அணியின் 34ஆவது மாநாடு (படங்கள்) Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top