தேசிய இளைஞர் விவகார அமைச்சின்
ஏற்பாட்டில் தேசிய கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றச் சென்ற யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட வல்வெட்டித்துறை அணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முதலாவதாக நேற்று காலை நடைபெற்றிருந்த காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் அணி அம்பாந்தோட்டை அணியினை வெற்றி கொண்டிருந்தது.
இதனை தொடர்ந்து கம்பஹா அணியுடன் அரையிறுதி போட்டி ஆரம்பமாகியிருந்த நிலையில் யாழ்ப்பாண அணி வெற்றிபெறுமென்ற அச்சத்தில் போட்டியை பார்வையிட்டுக் கொண்டிருந்த கம்பஹா அணியின் ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக விளையாட்டு மைதானத்தில் நின்றிருந்த வீரர்கள் மீதே வெளியிலிருந்து கற்கள் மற்றும் கழிவு பொருட்கள் வீசப்பட்டது. அத்துடன் முறையற்ற வகையில் விளையாட்டு இடைநிறுத்தப்பட்டு உள்ளது.
வெளியே இருந்து "தமிழ் நாய்களே வெளியே செல்லுங்கள்" என்ற கோசங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டதை அடுத்து யாழ்ப்பாண வீரர்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அங்கிருந்து தம்மை பாதுகாப்பாக வெளியேற்றவும் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதேச ரீதியாக இடம்பெற்ற பல சுற்றுப்போட்டிகளை தொடர்ந்து வல்வெட்டித்துறை கழுகுகள் விளையாட்டு கழகமே தெரிவாகி தேசிய மட்ட போட்டிக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.