தொலைபேசி,வீடியோ உரையாடல் மூலம் ஐ.நா சாட்சியங்கள் - TK Copy தொலைபேசி,வீடியோ உரையாடல் மூலம் ஐ.நா சாட்சியங்கள் - TK Copy

  • Latest News

    தொலைபேசி,வீடியோ உரையாடல் மூலம் ஐ.நா சாட்சியங்கள்


    தொலைபேசி,வீடியோ உரையாடல் மற்றும்
    ஸ்கைப் மூலமாக ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

    ஐ.நா.மனித உரிமைகள் செயலக வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. அந்த தகவல்களின்படி, போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. சபை தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

    இந்த விசாரணைக்குழுவிடம் சாட்சியம் அளிக்க வட அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இலங்கையில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக் நகரங்களுக்கு சென்று அவர்கள் சாட்சியமளிப்பதில் சிக்கல்கள் உள்ளன.

    இதேவேளை ஐ.நா. குழுவிடம் சாட்சியமளிப்பவர்கள் துன்புறுத்தல், அச்சுறுத்தலுக்கு ஆளாகக் கூடிய நிலைமை காணப்படுகிறது. சாட்சியமளிப்போரைப் பாதுகாக்கும் விதத்திலான சட்ட அமைப்புகளும் இலங்கையில் இல்லை.

    எனவே இலங்கையில் வாழும் சாட்சியாளர்கள் தொலைபேசி, 'வீடியோ கெண்வரன்ஸ்', 'ஸ்கைப்' மூலமாக நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக்கில் அமையும் ஐ.நா. விசாரணைக் குழுவின் முகவர் இடங்களுக்கு தங்கள் சாட்சியங்களை அளிக்க முடியும் - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    எந்த ஒரு சர்வதேச விசாரணையையும் சிறீலங்காவில் நடத்த அரசாங்கம் விரும்பவில்லை என்பதுடன் அனுமதிக்கவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தொலைபேசி,வீடியோ உரையாடல் மூலம் ஐ.நா சாட்சியங்கள் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top