வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துலக சமூகத்திடம் முன்வைப்பதற்குரிய றிமுறைத் திட்டங்களை ஐ.நா. மனித உரிமைகள் சபை தற்போது வகுத்துவருகின்றது.
அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவது அரசுக்கு கவலையளிக்கின்றது.'' இவ்வாறு தெரிவித்துள்ளார் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் கூட்டணி அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுள் ஒருவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண.
"ஐ.நாவிடமோ அல்லது அமெரிக்காவிடமோ முறையிடுவதன் மூலம் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே, உள்நாட்டுத திட்டங்கள் மீது கூட்டமைப்பு நம்பிக்கை வைக்கவேண்டும்'' என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் முன்னெடுக் கப்படவுள்ள விசாரணை, ஐ.நா. மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சின்போது கூட்டமைப் பினர் முன்வைத்த கோரிக்கைகள் ஆகியன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணைக்குழுவின் நோக்கம் என்னவென்று எமக்குத் தெரியும். திட்டமிட்டதொரு நிகழ்ச்சிநிரலை இலங்கை மீது திணிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அத்துடன், குறுகிய காலத்துக்குள் ஐ.நா. விசாரணைக் குழுவால் பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுக்க முடியாது.
விசாரணையாளர்கள் பக்கச்சார்பற்றவர்கள் என நாம் எவ்வாறு நம்புவது? இவற்றைக் கருத்திற்கொண்டே நாடாளுமன்றத்தினூடாக மக்களின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படவேண்டும் என்ற கருத்தை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் கட்டியயழுப்புவதே மனித உரிமைகள் சபையின் நோக்கமாக இருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குத் தடைவிதிக்கும் அதிகாரம் இல்லாதபோதிலும் உலகின் ஆதரவைத் திரட்டி பாதுகாப்புச்சபையின் ஊடாக அதை செய்வதற்குரிய நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன. இவ்வாறானதொரு நிலையில், ஐ.நா. குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கூட்டமைப்பு செயற்படுவது கவலையளிக்கின்றது.
உள்நாட்டுப் பிரச்சினைகளை உள்நாட்டிலேயே பேசித் தீர்க்கும் வழிமுறைகள் இருக்கையில் கூட்டமைப்பு ஏன் இவ்வாறு செயற்படவேண்டும்?'' என்றும் அவர் தெரிவித்தார்.