கொழும்பை கலைக்கும் ராஜதந்திரிகளின் விஜயம் எதற்கு? - TK Copy கொழும்பை கலைக்கும் ராஜதந்திரிகளின் விஜயம் எதற்கு? - TK Copy

  • Latest News

    கொழும்பை கலைக்கும் ராஜதந்திரிகளின் விஜயம் எதற்கு?


    இந்தவாரம் முழுவதுமாக ஐ.நா, அமெரிக்க,
    யப்பான் மற்றும் சுவிஸ் முக்கிய இராஜதந்திரிகளும் கொழும்புக்கு அவசர விஜயம் மேற்கொண்டிருக்கின்றனர்.

    கடந்த வாரம் அவசர பயணமாக கொழும்பை வந்தடைந்த இராஜதந்திரிகள் 20ஆம் திகதி அரசின் உயர் அதிகாரிகள் பலரை சந்தித்து ஐ.நா விசாரணைக்குழு மற்றும் அண்மைய நிலவரம்  தொடர்பிலும் முக்கிய கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளனர்.

    இலங்கை மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்கு ஐ.நா. மனித உரிமை பேர­வை­யினால் அமைக்­கப்­பட்ட விசா­ர­ணைக்­குழு அடுத்த மாதம் நடுப்­ப­கு­தியில் தனது விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­க­வுள்­ளது. இந்தக் குழுவின் தலை­வ­ராக நியூஸி­லாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதி­ப­தி­யான டேம் சில்­வியா கார்ட்ரைட் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் குழுவின் விசேட நிபு­ண­ராக பின்­லாந்தின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் நோபல் பரிசு பெற்­ற­வ­ரு­மான மார்ட்­டியும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 

    இந்த விசா­ர­ணைக்­குழு தற்­போது சம்­ப­வங்கள் தொடர்­பி­லான ஆவ­ணப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கை­யினை ஆரம்­பித்­துள்­ளது. அடுத்த மாத நடுப்­ப­கு­தியில் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­க­வுள்ள இக் குழு­வா­னது வட அமெ­ரிக்க நாடுகள், ஐரோப்­பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடு­க­ளுக்கு விஜ­யங்­களை மேற்­கொண்டு சாட்­சி­யங்­களை திரட்­ட­வுள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 

    விசா­ர­ணைக்­குழு விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க உள்ள நிலையில் இந்தக் குழுவின் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைக்­கப்­போ­வ­தில்லை என்றும் குழு­வி­னரை நாட்­டுக்குள் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை எனவும் அர­சாங்கம் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான பிரே­ரணை கடந்த மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்­ட­போதே அதற்கு எதிர்ப்பு தெரி­வித்த அர­சாங்கம் இந்த விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­கப்­போ­வ­தில்லை என்று அறி­வித்­தி­ருந்­தது. 

    இந்த விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு அர­சாங்கம் ஒத்­து­ழைக்க வேண்­டு­மென்று கனடா, அமெ­ரிக்கா, பிரிட்டன் உட்­பட ஐரோப்­பிய நாடுகள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன. ஆனாலும் அர­சாங்கம் இந்த கோரிக்­கை­க­ளையும் நிரா­க­ரித்­துள்­ளது. இந்த நிலையில் ஐக்­கிய நாடுகள் சபையின் அர­சி­யல்­துறை விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச்­செ­ய­லாளர் ஒஸ்கார் பெர்னாண்டஸ், அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் தெற்­கா­சிய விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரதி உதவிச் செய­லாளர் அத்துல் கேசாபி ஆகியோர் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்­ளனர். 

    இலங்கை வந்­தி­ருந்த இவர்கள் கடந்த சில நாட்­க­ளாக நாட்டில் தங்­கி­யி­ருந்து அர­சாங்கத் தரப்­பினர் மற்றும் எதிர்த்­த­ரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­யினை நடத்­தி­யுள்­ளனர். 

    அமைச்­சர்­க­ளான பஷில் ராஜபக் ஷ, ஜீ.எல். பீரிஸ் மற்றும் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் உள்­ளிட்ட குழு­வி­ன­ரையும் இவர்கள் இரு­வரும் சந்­தித்து பேசி­யுள்­ளனர். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்க வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து இவர்கள் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றனர். 

    அமெ­ரிக்க இராஜாங்கத் திணைக்­க­ளத்தின் தெற்­கா­சிய விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரதி உதவி செய­லாளர் அத்துல் கேசா­பியை சந்­தித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சி­ய­மளிப்­ப­வர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்­வைத்­துள்­ளனர். 



    ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஒஸ்கார் பெர்டினேட்ஸ் டெரொன்கோ அவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களை ஜூன் 20 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது,




    இதேபோல், ஐ.நா.வின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவிச் செய­லாளர் ஒஸ்கார் பெர்­னாண்­டஸை இரு­தி­னங்கள் சந்­தித்து பேசிய கூட்­ட­மைப்­பினர் விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மென்றும் இர­க­சியத் தன்மை பேணப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

    இந்தச் சந்­திப்பில் கருத்துத் தெரி­வித்த ஐ.நா.வின் உதவிச் செய­லாளர், சர்­வ­தேச விசா­ர­ணைக்­குழு விட­யத்தில் நாட்டின் எதிர்­காலத்தை கருத்­தில்­கொண்டு அர­சாங்கம் பொறுப்புக்கூறலில் இருந்து வில­காது நடந்­து­கொள்ள வேண்டும். அதுவே நாட்டின் எதிர்­கா­லத்­துக்கு நன்மை பயக்கும் என்று கூறி­யுள்ளார்.

    இதேபோல் ஐ.நா.வின் உத­விச்­செ­ய­லாளர் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீதி­ய­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமை சந்­தித்து பேசி­ய­போது அளுத்­கமை மற்றும் தர்­கா­நகர், பேரு­வளை பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­முறைகள் குறித்து சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் ஐ.நா. விசா­ரணை விவ­கா­ரத்தில் உள்­ளக விசா­ரணை செயற்­பாடு போது­மா­னது என்ற அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை எடுத்­துக்­கூறி­ய­துடன் இது­கு­றித்த பாரா­ளு­மன்ற பிரே­ர­ணைக்கு வாக்­க­ளிக்­காமல் விட்­ட­தன்­மூலம் கட்சி என்ற அடிப்­ப­டையில் சர்­வ­தேச விசா­ரணை விட­யத்தில் நடு­நிலை பேணு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

    இலங்கை வந்­தி­ருந்த இரண்டு பிர­தி­நி­தி­களும் அர­சாங்க தரப்பில் அமைச்­சர்­க­ளான ஜீ.எல். பீரிஸ் மற்றும் பஷில் ராஜபக் ஷ ஆகி­யோரை சந்­தித்து பேசி­ய­போது அவர்கள் இரு­வரும் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை எடுத்துக் கூறி­யி­ருக்­கின்­றனர். ஐ.நா.வின் விசா­ர­ணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­மளிப்­ப­வர்கள் தொடர்பில் அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே இரு­வே­றான நிலைப்­பா­டுகள் இருக்­கின்­றமை அமைச்­சர்­களின் கருத்­துக்­களில் இருந்து புல­னா­கின்­றது.

    இந்த விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சியம் அளிப்­ப­வர்கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்­தி­ருந்தார். அமைச்­சரின் இந்தக் கூற்­றா­னது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஐ.நா. மற்றும் அமெ­ரிக்க பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது இந்த விடயம் குறித்தும் கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

    இந்­த­நி­லையில், அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார, மக்­களின் சாட்­சி­ய­மளிக்கும் உரி­மையை அர­சாங்­கத்தால் பறிக்­க­மு­டி­யாது. அவ்­வாறு செய்யமுனை­வது அடிப்­படை உரி­மை­ மீ­ற­லாகும். ஐ.நா. விசா­ர­ணைக்­கு­ழுவோ அல்­லது எந்­த­வொரு விசா­ர­ணைக்­குழு முன்னோ சாட்­சி­ய­ம­ளிக்க விரும்­புவோர் சாட்­சி­ய­ம­ளிக்க முடியும். தாம் கண்ணால் கண்ட விட­யத்தை சாட்­சி­ய­மாக வழங்­கு­வ­தற்கு ஒவ்­வொரு மனி­த­னுக்கும் உரிமை உண்டு.

    அதனை அர­சாங்­கமோ அல்­லது வேறு எவரோ தட்­டிப்­ப­றிக்க முனை­வார்­க­ளானால் அது அடிப்­படை மனித உரிமை மீற­லாகும். இதனை ஏற்க முடி­யாது என்றும் தெரி­வித்­துள்ளார். ஐ.நா. விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சியம் அளிக்க முன்­வ­ரு­ப­வர்­களை தடுத்­து­நி­றுத்தும் வகை­யி­லேயே அர­சாங்­கத்தின் செயற்­பாடுகள் அமைந்­துள்­ளன. இந்த விசா­ர­ணைக்­குழு விசா­ரணை நடத்­தக்­கூ­டாது எனக் கோரும் பிரே­ரணை ஒன்­றி­னையும் ஆளும் தரப்­பினர் கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வந்து நிறை­வேற்­றி­யி­ருந்­தனர்.

    இந்த விவா­தத்­தின்­போதும் ஐ.நா. விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்கள் தொடர்பில் பல்­வேறு வித­மான கருத்­துக்­களை அர­சாங்க மற்றும் எதிர்க்­கட்சித் தரப்­பினர் தெரி­வித்­தி­ருந்­தனர். ஐ.நா. விசாரணைக்குழு நியமிக்கப்பட்டமைக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

    2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடே ஐ.நா. விசாரணைக்கு வழிவகுத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஐ.நா. விசாரணைக்குழு தொடர்பில் அரசாங்கமானது தீர்க்கமான முடிவொன்றுக்கு வரவேண்டிய நிலை காணப்படுகின்றது.

    இந்தத் தீர்மானமானது நாட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். அவருடைய அறிக்கை கூட கொழும்பின் அரசியல் பீடத்தை மிரட்டும்பாணியில் அமைந்துள்ளது. அவர் தனது அறிக்கையில் அமெரிக்காவுக்கு எதிரானதாகவும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியாத நாடுகளாகவும் அமெரிக்காவால் பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை சேரப்போகின்றதா என்றவாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

    அமெரிக்காவின் இத்தகைய அறிவிப்பானது கொழும்பு அரசியல் மட்டங்களில் பாரிய அச்சத்தை தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை கொழும்பை வந்தடைந்த இந்த உயர் அதிகாரிகள் மகிந்தவை நேரில் சந்தித்ததாக செய்திகள் வெளிவராத போதும் மகிந்தரின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, த.தே.கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

     இதேவேளை கொழும்பை வந்தடைந்த சுவிஸ் நாட்டின் தூதுவர் இன்று யாழ்ப்பாணம் வந்தடைவார் என எதிர்பபார்க்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் வந்தடையும் அவர் ஆளுனரை சந்தித்தபின் மாலை 2.00 மணியளவில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனையும் சந்தித்து அண்மைய நிலவரம் தொடர்பில் ஆராயவுள்ளார்.

    அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய பிரதி உதவிச் செயலாளர் அட்டுல் கிசேப் அவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களை ஜூன் மாதம் 20 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடியபோது




    யப்பான் விசேட தூதருடன் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சே நேற்று சந்தித்து கலந்துரையாடியபோது





    இது தொடர்புடைய செய்திகள்

    ஈரான், சிரியா,வடகொரியா அணியுடன் சேரப்போகிறதா இலங்கை? அதுல் கெசாப்



    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கொழும்பை கலைக்கும் ராஜதந்திரிகளின் விஜயம் எதற்கு? Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top