இன்றைய நாள் எப்படி 25.06.2014 - TK Copy இன்றைய நாள் எப்படி 25.06.2014 - TK Copy

  • Latest News

    இன்றைய நாள் எப்படி 25.06.2014

    இன்றைய நாள் எப்படி

    தின பலன்
    இன்றையதினம் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும்-. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
    ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
    கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
    ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
    இன்றையதினம் சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
    கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
    சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வெளிப்படையான விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
     விருச்சிகம்
    புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
    இன்றையதினம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
    புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
    முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
    கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: இன்றைய நாள் எப்படி 25.06.2014 Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top