முதல் தடவையாக உடல் செயலிழந்த நபர் எண்ணத்தின் சக்தியால் கரத்தை அசைப்பு - TK Copy முதல் தடவையாக உடல் செயலிழந்த நபர் எண்ணத்தின் சக்தியால் கரத்தை அசைப்பு - TK Copy

  • Latest News

    முதல் தடவையாக உடல் செயலிழந்த நபர் எண்ணத்தின் சக்தியால் கரத்தை அசைப்பு


    உடலில் கழுத்துக்கு கீழான பகுதி செயலிழந்த
    நபர் ஒருவர் தனது எண்ணத்தின் சக்தியால் தனது கையை அசைத்துள்ளார். இவ்வாறு உடல் பகுதி செயலிழந்த ஒருவர் தனது எண்ணத்தின் சக்தியால் கரத்தை அசைப்பது இதுவே முதற்தடவையாகும்.

    அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் டப்ளின் நகரைச்சேர்ந்த அயன் புர்கார்ட் (23 வயது) என்பவரே தனது எண்ணத்தின் சக்தியால் தனது கரத்தை அசைத்துள்ளார். 2010 ஆண்டு வடகரோலினா கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற கார் விபத்தில் அயன்புர்காட்டின் முள்ளந்தண்டு சேதமடைந்ததால் அவர் உடல் செயலிழந்த நிலைக்கு உள்ளானார். 



    அந்நிலையில் ஒஹியோ மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய குழுவினர் புர்கார்ட்டின் மண்டையோட்டை அறுவைச்சிகிச்சை மூலம் திறந்து அதனுள் அவரது எண்ணங்களை வாசிப்பதற்கான 0.15 அங்குல அளவான சிப் உபகரணமொன்றைப் பொருத்தினர்.

    மேற்படி சிப் உபகரணமானது அவரது எண்ணங்கள் தொடர்பான தகவல்களை கணினியொன்றுக்கு அனுப்பப்படுகிறது. அந்தக் கணினியானது அந்தத் தகவல்களை முள்ளந்தண்டிலிருந்து வழங்கப்படுவதையொத்த கட்டளைகளாக மாறுகிறது.

    நோயாளியின் கரத்துடன் இணைக்கப்பட்டுள்ள அந்தக் கணினி அவரது எண்ணத்திற்கு ஏற்ப அவர் கையை அசைப்பதற்கு தூண்டுகிறது. இந்த தொழில் நுட்பமானது நோயாளி கையை அசைக்க வேண்டும் என நினைத்ததும் ஒரு செக்கனில் பத்திலொரு பகுதியிலும் குறைந்த நேரத்தில் கையை அசைக்க வழிவகை செய்கிறது.

    மேற்படி தொழில்நுட்பமானது பாரிசவாத நோயாளர்களுக்கு தசைகள் தொடர்பான ஒழுங்கீனங்களுக்கும் உள்ளாகி உடல் செயலிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவும் ஒன்றாக உள்ளதாக கூறப்படுகிறது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: முதல் தடவையாக உடல் செயலிழந்த நபர் எண்ணத்தின் சக்தியால் கரத்தை அசைப்பு Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top