ரிசாத் பதியுதீன், ஜனாதிபதியுடன் வாதமாம் உண்மையா நடந்ததோ ? - TK Copy ரிசாத் பதியுதீன், ஜனாதிபதியுடன் வாதமாம் உண்மையா நடந்ததோ ? - TK Copy

  • Latest News

    ரிசாத் பதியுதீன், ஜனாதிபதியுடன் வாதமாம் உண்மையா நடந்ததோ ?

    அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி தலைமையில்
    நடைபெற்றது அப்போது அங்கு பேருவளை மற்றும் அளுத்கம சம்பவம் குறித்து அலசப்பட்டது.
    இந்த வேளையில் குறிக்கிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஜனாதிபதியை நோக்கி 1983  ஜூலையில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு பிறகு உங்களின் ஆட்சியில் தான் மீண்டும் ஒரு இனக்ககலவரமும் பேரழிவும் ஏற்பட்டுள்ளன
    அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்திற்கான முழுப்பொறுப்பையும் உங்கள் தலைமையிலான இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
    இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் காரணமானவர் ஞானசார தேரர். ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இனியும் நீங்கள் கைது செய்யாவிட்டால் இதைவிட மோசமான அழிவை இந்த நாடு சந்திக்கும் என்றார்.
    அப்போது ஜனாதிபதி அமைச்சர் ரிசாத் பதியுதீனைப் பார்த்து, நீங்கள் முஸ்லிம்களுக்காக பேசுவதைப்போல், இங்குள்ள சிங்கள அமைச்சர்கள் சிங்கள மக்களுக்கு பேசத் தொடங்கினால் என்ன நடக்கும் என்று தெரியுமா எனக் கேட்டார்.
    இதற்கு பதிலளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் நீங்கள் அப்படி கூறக் முடியாது. நீங்கள் ஜனாதிபதி சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ் ,முஸ்லிம் மக்கள் என அனைவருக்கும் பொதுவானவர். நீங்கள் அனைவரையும் சமனாகவே பார்க்க வேண்டும். வாக்கை மையமாகக் கொண்டு நீங்கள் செயற்பட கூடாது என்றார்.
    இந்த பதில் ஜனாதிபதிக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது. கதிரையை விட்டு ஆவேசத்துடன் எழுந்த ஜனாதிபதி உன்னுடைய பேச்சை உடன் நிறுத்து. வாயைப் பொத்து என்று உரத்து சத்தம் இட்டு, நீ ஒரு இனவாதி, நீ ஒரு மதவாதி, உன்னுடைய செயற்பாடுகளை அவாதானித்துக் கொண்டுதான் வருகிறேன் என சீறிப்பாய்ந்தார்.
    இதன் பிற்பாடு அமளிதுமளி ஏற்பட்டது.
    இந்த வேளை அமைச்சர் ரிசாத்தை நோக்கி கை நீட்டிய சம்பிக்க ரணவக்க பொதுபல சேனாவை மட்டும் தடைசெய்ய முடியாது என்றார்.
    இதனை கடுமையாக எதிர்த்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், பொதுபலசேனாவை மட்டும் முடியாது என்றால் தடைசெய்வதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் ஏதும் இருக்கின்றதா எனக் கேட்டார்.
    எநதவொரு முஸ்லிம் அமைப்பும் இனவாதமாக செயற்படவில்லை எனக் கூறினார். இதன் பிற்பாடு அமைச்சரவை கலைந்தது.
    ஞானசார தேரர் ஒரு மிகப்பெரும் பயங்கரவாதி! பொது பல சேனாவை தடை செய்ய வேண்டும்! அமைச்சர் ரிஷாத்
    அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அரசாங்கம் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும், அதுமட்டுமன்றி பொது பல சேனா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும், என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
    சவூதிக்கு சென்றிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியவுடன் பேருவளைக்கு விஜயம் செய்தார்.
    அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்து பேருவளை அல்-ஹுமைசரா மத்திய கல்லூரியில் தஞ்சமடைந்துள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் அங்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    அவர் மேலும் தெரிவிக்கையில்,
    நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளால் முஸ்லிம்கள் அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவ்வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரனைகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் தொடர்பில் அரச உயர் தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளேன்.
    பேருவளை மற்றும் அளுத்கமை பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைகளும் சொத்து அழிவுகளுக்கும் பொது பலசேனாவின் ஞானசார தேரர் பொறுப்பேற்க வேண்டும்.
    இந்த அரசாங்கத்தில் இருப்பதையிட்டு வேதனையும் வெட்கமும் அடைகிறேன். அளுத்கம மற்றும் பேருவளை பிரச்சினைக்கு இந்நாட்டில் தீர்வு கிடைக்காவிடின் சர்வதேசத்தை நாடவும் பின்னிக்கப் போவதில்லை.
    ஞானசார தேரர் ஒரு மிகப்பெரும் பயங்கரவாதி. பொது பலசேனாவை தடைசெய்வதற்கும், ஞானசார தேரரை கைது செய்து சிறையில் அடைப்பதற்கும் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட்டு கோஷமெழுப்ப முன்வர வேண்டும்.
    முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதே பொது பலசேனாவின் ஒரே இலக்கு. நான் சவூதியில் இருந்தபோது அங்கு வாழும் நூற்றுக்கணக்கான பேர் ஒன்று பட்டு இந்த பொது பலசேனாவை தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தி கேட்டனர்.
    இந்த பாசிச பொது பலசேனாவின் சதியை முடிவுக்கு கொண்டுவர முஸ்லிம்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போமாக. அத்துடன் இப்பாடசாலையில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்த மக்களை அவர்களுக்கான அச்சுறுத்தல் நீங்கும் வரை பலவந்தமாக இங்கிருந்து வெளியேற்ற அனுமத்திக்கப்போவதில்லை.
    அளுத்கமை, தர்கா நகர், பேருவள முஸ்லிம்கள் மீது இனவெறிபிடித்த காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரத்தையும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சென்று பார்த்தேன். இவ்வாறான நாசகார செயல்களை செய்த பௌத்த தீவிரவாத அமைப்புக்கு எனது கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்.
    எந்தளவுக்கு மிகவும் கேவலமாக இறங்கி முஸ்லிம்களையும் அவர்களது வர்த்தகத்தையும் அழிக்க முடியுமோ அந்தளவுக்கு இனவெறியர்கள் கீழிறங்கியிருப்பதை என்னால் அங்கு உணர முடிந்தது.
    முஸ்லிம்கள் மீதான தாக்குதலினால் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள், சொத்தழிப்புக்கள் தொடர்பில் முஸ்லிம்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
    இயல்பு வாழ்க்கையினை மீளக் கொண்டு வருவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அரச உயர் தரப்பினர்pடம் வலியுறுத்தியுள்ளேன்.
    முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சம்பவங்களும் அனைத்தும் பொலிஸார் பார்த்தக் கொண்டிருக்கும் போதே இடம்பெற்றுள்ளன. எனினும் இவர்களில் ஒருவரேனும் இதுவரை கைது செய்யப்படாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது.
    ஜூன் 15ம் திகதி பொதுபல சேனா அமைப்பின் உரைகளின் பிரதிபலனாகவே இனவாதம் தூண்டப்பட்டு மிலேச்சத்தனமான தாக்குதல் தொடரப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ரிஷாத்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ரிசாத் பதியுதீன், ஜனாதிபதியுடன் வாதமாம் உண்மையா நடந்ததோ ? Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top