போரின் இறுதி ஏழு ஆண்டுகளிலும் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்
மற்றும் பிரதானமான உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க தனது பணியகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதற்கு, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேட் கொல்வில் கூறுகையில்,
“ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு, ஐ.நா மனிதஉரமைகள் பேரவையின் 25/1 தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியிருந்த போதிலும், அதனை மீறி, இந்த விசாரணைகளுக்கு ஒத்தழைக்கப் போவதில்லை என்று சிறிலங்கா பிரதிநிதி கடந்த செவ்வாய்க்கிமை அறிவித்தது ஐ.நா மனிதஉரிமை ஆணயாளரை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஆணையின் பேரில், அரசாங்க ஒத்துழைப்பு இன்றி விசாரணை நடத்தப்பட்ட ஏனைய சூழ்நிலைகளில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம், நன்கு பரிசோதிக்கப்பட்ட முறைகளை கையாண்டது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜூன் 5ம் நாள் ஐ.நா மனிதஉரிமை ஆணயாளர் நவநீதம்பிள்ளை கடிதம் எழுதியிருந்தார். விசாரணைக் குழு மற்றும் அதன் செயல்முறைகள். குறித்து அதில் அவர் விபரித்திருந்தார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.