அரசியலில் இராணுவத் தலையீடுகள் -வீரகேசரி - TK Copy அரசியலில் இராணுவத் தலையீடுகள் -வீரகேசரி - TK Copy

  • Latest News

    அரசியலில் இராணுவத் தலையீடுகள் -வீரகேசரி

    உடனுக்குடன் செய்திகளுக்கு http://www.tamilkingdom.org உடன் இணைந்திருங்கள்
    எங்கும் இரா­ணுவம், எதிலும் இரா­ணுவம் என்­பதுதான்
    இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பாட்டு உத்­தி­யாக இருக்­கின்­றது. முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்­தி­ருந்த யுத்­தத்தை இந்த அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்­துள்­ளது.

    அது ஒரு பெரிய சாத­னை­யாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. அந்த சாத­னை­மிக்க யுத்த வெற்­றிக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்ட இரா­ணு­வத்­தையும், அதன் புல­னாய்வுச் செயற்­பா­டு­க­ளையும் அர­சாங்கம் தனது சுய­லாப அர­சியல் செயற்­பா­டு­க­ளுக்கு முழு அளவில் தந்­தி­ரோ­பாய ரீதியில் பயன்­ப­டுத்தி வரு­வதைக் காண முடி­கின்­றது. 

    உள்ளூ­ரிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும், இந்த நட­ வ­டிக்கை பரந்த அளவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. இதன் கார­ண­மா­கவே எங்கும் இரா­ணுவம், எதிலும் இரா­ணுவம் என்ற நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்று குறிப்­பிட வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. யுத்தம் முடி­வ­டைந்த பின்னர், இரா­ணுவம் யுத்தம் நடை­பெற்ற பிர­தே­சங்­களில் இருந்து விலக்கிக் கொள்­ளப்­பட வேண்டும். 

    யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் இரா­ணுவ சேவையில் இருந்து ஓய்­வ­ளிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அவர்கள் சாதா­ரண சிவி­லி­யன்­க­ளாக சமூக வாழ்க்­கையில் ஈடு­பட்­டி­ருக்க வேண்டும். இதற்­கான வழி­வ­கைகளையே அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருக்க வேண்டும். ஆனால் அர­சாங்கம் அவ்­வாறு செய்­ய­வில்லை. 

    மாறாக இரா­ணு­வத்­தையும், யுத்தச் செயற்­பா­டு­களில் தீவி­ர­மாகப் பணி­யாற்­றி­ய­வர்­களைக் கௌர­விக்கும் வகை­யிலும், அதே­நேரம், அவர்­களை தனது அர­சியல் நலன்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­து­வ­திலும் அது மிகவும் சாது­ரி­ய­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. 

    யுத்த களத்தில் முன்­ன­ணியில் நின்று கடி­ன­மாகச் செயற்­பட்­டி­ருந்த இரா­ணுவ தள­ப­திகள் இன்று இரா­ஜ­தந்­தி­ரி­க­ளாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். வெளி­நா­டு­களின் தூது­வர்­க­ளாக, ஐ.நா. மன்­றத்தின் பிர­தி­நி­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இறுதி யுத்­தத்­தின்­போது அரச படைகள் மோச­மான முறையில் மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தன என்ற குற்­றச்­சாட்­டுக்கள் வெளிப்­ப­டை­யா­கவே அரசு மீது சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 

    இருந்த போதிலும், அந்த காலப்­ப­கு­தியில் இரா­ணு­வத்­தி­னரை யுத்த பூமியில் வழி­ந­டத்­திய இரா­ணுவ தள­ப­தி­களே, அவ்­வா­றான மனித உரிமை மீறல்கள் எது­வுமே இடம்­பெ­ற­வில்லை என்று அர­சாங்­கத்தின் அதி­கா­ர­முள்ள பிர­தி­நி­தி­க­ளாக சர்­வ­தேச அரங்­கு­களில் வாதா­டு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

     விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­த­மா­னது வெல்ல முடி­யாத ஒரு யுத்தம் என அநே­க­மாக எல்­லோ­ராலும் கரு­தப்­பட்டு வந்­தது. அந்த கருத்­தி­யலை முறி­ய­டித்து, சாது­ரி­ய­மான காய் நகர்த்­தல்­களின் மூலம், விடு­த­லைப்­பு­லி­களை யுத்­தத்தில் தோற்­க­டித்து, அந்த அமைப்பை இரா­ணுவ ரீதி­யாக இந்த அர­சாங்கம் அழித்­தி­ருக்­கின்­றது. 

    இத்­த­கைய ஒரு வெற்­றிக்கு இரா­ணு­வத்தின் ஆளணி, அதன் மரபு வழி­சார்ந்த செயற்­பா­டு­க­ளுடன், ஒரு கெரில்லா அமைப்­பு­ட­னான யுத்­தத்தை முறி­ய­டிப்­ப­தற்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்ட உச்ச வலு நிலை­யி­லான தந்­தி­ரோ­பா­ய­மிக்க இரா­ணுவ புல­னாய்வுச் செயற்­பா­டு­களும் அர­சாங்­கத்­திற்குப் பேரு­த­வி­யாக இருந்­தன என்று இரா­ணுவ ஆய்­வா­ளர்கள் கூறி­யி­ருக்­கின்­றனர். 

    நன்கு பயிற்­றப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரை சிறு சிறு குழுக்­க­ளாக விடு­த­லைப்­பு­லி­களின் பிர­தே­சத்­திற்குள் ஊடு­ருவ விட்டு, அவர்கள் எதிர்­பா­ராத நேரங்­களில், எதிர்­பா­ராத இடங்­களில், எதிர்­பா­ராத இலக்­குகள் மீது அதி­ர­டி­யாக மேற்­கொண்ட ஊடு­ருவல் தாக்­கு­தல்கள் விடு­த­லைப்­பு­லி­களை பல தட­வை­களில் நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் நிலை­கு­லையச் செய்­தி­ருந்­தன என்று அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள். 


    இதை­யும்­விட, விடு­த­லைப்­பு­லிகள் தமது ஆள­ணியைப் பெருக்­கு­வ­தற்­காக கட்­டாய ஆட்­சேர்ப்­பின்­போது வீதி­களில் சென்­ற­வர்­க­ளையும், கண்­ணி­ல­கப்­பட்­ட­வர்­க­ளையும் படையில் இணைத்துக் கொண்­ட­போது, படைக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­ப­வர்­களின் சரி­யான பின்­னணி, அவர்­க­ளு­டைய மனப்­போக்கு என்­ப­வற்றைக் கவ­னத்திற் கொள்­ளாமல் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யா­னது, இரா­ணுவம் தனக்கு வேண்­டி­ய­வர்­களை அல்­லது தனக்கு உளவு பார்ப்­ப­வர்­களைத் தாரா­ள­மாக விடு­த­லைப்­புலி­க­ளு­டைய அமைப்­பினுள் ஊடுருவி கலந்­து­வி­டு­வ­தற்கு உத­வி­யி­ருந்­த­தா­கவும் அவர்கள் கூறு­கின்­றார்கள். 

    இவ்­வாறானஊடு­ருவல் செயற்­பாடா­னது, விடு­த­லைப்­புலி­களின் செயற்­பா­டு­களைப் பல­வீ­னப்­ப­டுத்­தவும், அவர்கள் மீது அரச படை­யினர் தொடர்ச்­சி­யாக அதி­ரடி தாக்­கு­தல்களை மேற்­கொள்­வ­தற்கும் பேரு­த­வி­யாக இருந்தது என்­பது அவர்­க­ளு­டைய கூற்­றாகும். அர­சியல் ஊடு­ருவல் செயற்­பா­டுகள் இது எந்த அள­வுக்குச் சரி­யா­னது என்­பது ஆய்­வுக்கு உரிய விட­ய­மாக இருந்த போதி லும், எதி­ர­ணி­யினர் பக்கம் ஊடு­ருவி, காரி­யங்­களை முன்­னெ­டுக்­கின்ற பாணியை – உத்­தியை அர­சாங்கம், யுத்தம் முடி­வுக்கு வந்­த­பின்னர், தனது அர­சியல் செயற்­பா­டு­களில் முன்­னெ­டுத்­தி­ருப்­பதைக் காணமுடி­கின்­றது. 

    இந்த வகை­யில்தான் சர்­வ­தேச மட்­டத்தில் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளாக முன்னாள் இரா­ணுவ தள­ப­திகள் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதை நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. அதே­நேரம், முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள், தள­ப­தி­களை நிர்­வாகச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்­காக அதி­கா­ரி­க­ளா­கவும், சில இடங்­களில் அர­சாங்க அதி­பர்­க­ளா­கவும், மாகா­ணங்­களின் ஆளு­னர்­க­ளா­கவும் அர­சாங்கம் நிய­மித்­தி­ருக்­கின்­றது. 

    வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களில் இந்த நட­வ­டிக்கை தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன், இரா­ணு­வத்தைப் பல இடங்­க­ளிலும் நிரந்­த­ர­மாக நிலை­நி­றுத்­தி­யி­ருப்­ப­துடன், மீள்­கு­டி­யேற்றம், மீள் கட்­ட­மைப்பு என்ற புன­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களில் இரா­ணு­வத்­தி­னரை முக்­கிய செயற்­பாட்­டா­ளர்­க­ளாக அர­சாங்கம் மாற்­றி­யி­ருக்­கின்­றது. 

    இதன் மூலம் அவர்கள் சிவில் நிர்­வாக நட­வ­டிக்­கை­களில் பிரித்து ஒதுக்கிச் செயற்­பட முடி­யாத வகையில் முக்­கிய பங்­கா­ளி­க­ளா­கவும், முக்­கி­ய­மான விட­யங்­களில் தீர்­மா­னங்கள் எடுப்­பதில் முக்­கி­யஸ்­தர்­க­ளா­கவும் மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

    இத்­த­கைய இரா­ணுவ அதி­காரி­க­ளுக்கு உத­வி­யாக கிராம சேவை அலு­வலர் பிரி­வு­களில் அல்லது இரா­ணுவ கட்­டளைத் தலை­மை­யக­ங்கள் ரீதி­யாக பிரிக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவச் செயற்­பாட்டுப் பிர­தே­சங்­க­ளுக்குப் பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ அதி­கா­ரிகள் மற்றும் அவர்­க­ளுக்குக் கீழ் பணி­யாற்­று­கின்ற இரா­ணு­வத்­தினர் மற்றும் புல­னாய்­வா­ளர்கள் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். 

    தேசிய பாது­காப்பை உறுதி செய்­வ­தற்கும், பிர­தே­சங்­களில் கிராம மட்­டங்­களில் குற்­றச்­செ­யல்கள் ஏற்­ப­டாமல் தடுப்­ப­தற்­கா­க­வுமே இவர்கள் - பாது­காப்பு குழுக்கள் - செயற்­ப­டுவ­தாகக் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்துடன் இத்­த கைய வலை­ய­மைப்பில் பொலி­சாரும் இணைக்­கப்­பட்டு, முக்­கி­யமாக அந்­தந்தப் பிர­தே­சத்தின் அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள், மக்­களின் குறைகள் தேவை­களை நிறை­வேற்றுதல், அத்­துடன் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும், இன ங்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லிணக்கத்தையும், ஐக்­கி­யத்­தையும் உரு­வாக்­குதல் போன்ற செயற்­பா­டு­களில் இரா­ணு­வத்­தி­னரும், பொலி­ஸா ரும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அரசாங்கம் கூறிவரு­கின்­றது. 

    ஆனால் உண்­மையில் அரசாங்கம் தனது அர­சியல் செயற்­பா­டு­களைத் தான் விரும்­பி­ய­வாறு முன்­னெடுப்­ப­தற்கும், அர­சாங்­கத்­திற்கு எதி­ராகச் செயற்­பட முற்­ப­டு­ப­வர்­களைத் தொடர்ச்­சி­யாகக் கண்­கா­ணித்து, அவர்­களின் செயற்­பா­டு­களை முடக்­கு­வ­தற்­குமே, இந்த உத்­தியைப் பின்­பற்றிச் செயற்­பட்டு வரு­கின்­றது. இந்த உத்தி கார­ண­மா­கவே, மீள்­கு­டி­யேற்றப் பகு­தி­களில் உள்ள மக்­களின் சமூக ஒன்­று­கூ­டல்கள், கிரா­மிய மட்­டத்­தி­லான கிராம அபி­வி­ருத்திச் சங்கக் கூட்­டங்கள், மாதர் அபி­வி­ருத்திச் சங்­கங்கள், இளைஞர் குழுக்கள், ஆலய பரி­பா­லன குழுக்கள் என்­ப­வற்றின் கூட்­டங்கள் அந்தப் பிர­தே­சத்­திற்­கு­ரிய இரா­ணுவ, பொலிஸ் அதிகா­ரி­களின் அனு­மதி பெற்று நடத்­தப்­பட வேண் டும் என்ற நடை­முறை கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

    அது மட்­டு­மல்­லாமல் அந்தப் பிர­தே­சங்­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சமூக நிகழ்­வுகள், அபிவிருத்திச் செயற்­பா­டுகள் தொடர்­பி­லான அரச வைப­வங்கள் எது­வாக இருந்­தாலும், அந்­தந்தப் பிர­தே­சங்­க­ளுக்குப் பொறுப்­பான இரா­ணுவ பொலிஸ் அதி­கா­ரிகள் அவற்றில் முக்­கி­யஸ்­தர்க­ளாகக் கலந்து கொள்ளும் விதத்தில், அவர்­க­ளையும் விருந்­தி­னர்­க­ளாக அழைக்க வேண்டும் என்று கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 

    மொத்­தத்தில் அதன் மூலம், அந்­தந்தப் பிர­தே­சங்­களைச் சேர்ந்த இரா­ணுவ பொலிஸ் வலை­ய­மைப்பில் உள்­ள­வர்கள் அர­சாங்­கத்தின் கண்­க­ளா­கவே செயற்­பட்டு வரு­கின்­றார்கள். அடி­மட்­டத்தில் யார் யார் வந்து போகின்றார்கள், என்­னென்ன நடக்­கின்­றது, என்ன வகையில் சம்­ப­வங்கள் நடை­பெ­று­கின்­றன, என்­னென்ன நோக்­கத்திற்காக நடை­பெ­று­கின்­றன என்­பது போன்ற விட­யங்­களைத் தெட்டத் தெளி­வாக அர­சாங்­கத்­தினால் உட­னுக்­குடன் அறிந்து கொள்­வ­தற்கு இது உத­வு­கின்­றது. 

    உண்­மை­யான அடி­மட்ட நிலை­மை­களை அறிந்து, தேவை­யான இடங்­களில் தனது அர­சியல் செயற்­பா­டு­களை மக்கள் மத்­தியில் முன்­னெ­டுக்­கவும், நிலைமைகள் நேர்­மா­றாக இருந்தால் அவற்றை முறி­ய­டிப்­ப­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யா­கவே முன்­னெ­டுப்­ப­தற்கும் அர­சுக்கு இது உத­வி­யாக இருக்­கின்­றது. அர­சாங்­கத்தின் கொள்­கை­களை மக்கள் மத்­தியில் பரப்­பு­வ­தற்கும், அர­சுக்கு எதி­ரான அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­வர்­களின் நட­வ­டிக்­கை­களைத் தாம­தப்­ப­டுத்தி வீரி­ய­மி­ழக்கச் செய்­வ­தற்கு, அல்­லது அத்­த­கைய செயற்­பா­டுகள் அங்கு பெரிய அளவில் இடம்­பெ­றாமல் தடுப்­ப­தற்கு இந்த நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­திற்குப் பெரிய அளவில் உதவி வரு­கின்­றன என்றால் அது மிகை­யா­காது. 

    மீள்­கு­டி­யேற்றப் பகு­தி­களில் அரச கொள்­கை­களை ஏற்­றுக்­கொள்­ளா­த­வர்கள் அல்­லது அரச நட­வ­டிக்­கை­களை விமர்­சனக் கண்­ணோட்­டத்­துடன் கேள்வி எழுப்பி மக்­களைத் திசை திருப்­பு­வ­தற்கு முற்­ப­டு­கின்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் செயற்­பா­டுகள் இதன் வழி­யாக அர­சாங்­கத்­தினால் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. 

    உண்­மை­யான கள நிலை­மை­களை அறிந்து அவற்றை வெளிக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்­சிக்­கின்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள். தொண்டு நிறு­வ­னங்­களைச் சேர்ந்­த­வர்­கள்­கூட, இத்­த­கைய நட­வ­டிக்­கை­களின் மூலம் புல­னாய்வு பிரி­வி­னரின் மூலம், தொடர்ச்­சி­யாகக் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தையும் நடை­மு­றையில் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. 

    இத்­த­கைய ஊடு­ருவல் நட­வ­டிக்­கையின் பய­னா­கத்தான், காணாமல் போன­வர்கள் நடத்­து­கின்ற அர­சுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்கள், இந்­திய வீட­மைப்புத் திட்­டத்தின் கீழ் அரச ஆத­ர வா­ளர்­க­ளுக்கு பக்­க­ச்சார்­பான முறையில் இடம்­பெற்று வரு­கின்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்கள் என்­பன இடம்­பெ­று­கையில், அது பற்­றிய தக­வல்­களை தனது ஊடு­ருவல் வலை­ய­மைப்பின் ஊடாக அரசு அறிந்து, அந்தப் போராட்டங்­க­ளுக்கு எதி­ரான – அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வான போராட்­டங்­களை உட­ன­டி­யா­கவே மேடை­யேற்ற முடி­கின்­றது. 

    இதனால் பொது­மக்கள் மத்­தியில் கருத்­தியல் ரீதி­யான ஒரு குழப்ப நிலையை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் சரி­யா­னவை என்று அவர்­களை நம்பச் செய்­யவும் அர­சாங்­கத்­தினால் முடி­கின்­றது

    விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்னர் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு அவ­சி­ய­மில்லை என்ற நிலைப்­பாட்டை அர­சாங்கம் பல்­வேறு வழி­களில் வலி­யுறுத்தி வரு­கின்­றது. நாட்டில் இனப்­பி­ரச்­சினை என்ற ஒன்று கிடை­யாது. இருப்­ப­தெல்லாம் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையே என்று அர­சாங்கம் வாதாடி வரு­கின்­றது. 

    இதற்­கான பிர­சா­ரங்­களும் பெரிய அளவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இதற்கு முண்டு கொடுக்கும் வகையில் அரச தரப்பு அர­சி­யல்­வா­தி­களும் அர­சியல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள். அர­சாங்­கத்தின் இத்­த­கைய நுணுக்­க­மான அர­சியல் செயற்­பாட்டு நட­வ­டிக்­கைகள் சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் சார்ந்த விட­யங்­களில் மட்டும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

    இது மற்­று­மொரு சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய முஸ்லிம் மக்­களை பொரு­ளா­தார ரீதி­யாக அடக்­கி­யொ­டுக்­கு­வ­தற்கும் இரா­ஜ­தந்­திர ரீதியில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. முஸ்­லிம்கள் பௌத்­தர்­களை மத­மாற்றம் செய்து பௌத்த மதத்தை இல்­லாமல் செய்­வ­தற்காக முயன்று வரு­கின்­றார்கள். 

    இதற்­கான மறை­ முகச் செயற்­பா­டு­களில் அவர்கள் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள் என்­பது பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்­களின் பொது­வான குற்­றச்­சாட்­டாகும். இதன் கார­ண­மா­கவே முஸ்லிம் அடிப்­ப­டை வா­திகள் செயற்­பட்டு வருகின்றார்கள் எனக் கூறி, அவர்­க­ளு­டைய செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்று தாங்கள் போராடி வரு­வ­தாக அவர்கள் கூறு­கின்­றார்கள். 

    குறிப்­பாக பொது­ப­ல­சே­னாவின் செய­லா­ள­ரா­கிய கல­கொட அத்தே ஞான­சார தேரர் இதனை அடிக்­கடி கூறி வரு­கின்றார். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மத­வி­ரோதப் பேச்­சுக்­க­ளி­லும்­சரி, செயற்பா­டு­க­ளிலும் சரி அவரே முன்­னிலை வகிக்­கின்றார். 

    இனங்கள் மற்றும் சமயங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்­தையும் சமா­தா­னத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்­காக நிறு­வப்­பட்­டதாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற மித­வாத அமைப்­பா­கிய பொது பல­சேனா அமைப்பின் தலை­வரும் மகி­யங்­கனை பிர­தேச சபை உறுப்­பி­ன­ரு­மா­கிய வட்­ட­ரக்க விஜித்த தேரரை, பகி­ரங்­க­மாக தகாத வார்த்­தை­க­ளினால் பொது இடத்தில் வைத்து ஏசி, அவர் பௌத்­தர்­க­ளுக்குத் துரோ­க­மி­ழைக்­கின்றார் என்று ஞான­சார தேரர் குற்றஞ் சுமத்­தி­யி­ருந்தார். 

    மன்னார் மாவட்டம் முசலி பிர­தேச செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட மரைக்கார் தீவு முஸ்­லிம்கள் தமது காணி­க­ளை­விட்டு கடற்­ப­டை­யினர் வெளி­யேற வேண்டும் என்று போராட்டம் நடத்­தி­ய­போது, அங்கு சென்று அவர்­க­ளு­டைய நிலை­மை­களை நேரில் கண்­ட­றிந்­ததன் பின்னர் கொழும்பில் அது குறித்து ஊட­கங்­க­ளிடம் தெரி­விப்­ப­தற்­காக நடத்­திய பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டைக் குழப்­பி­ய­டித்து, ஊட­க­வி­ய­லா­ளர்கள் முன்­னி­லை­யி­லேயே ஞான­ சார தேரர் இவ்­வாறு அநா­க­ரி­க­மாக நடந்து கொண்டார். 

    அதற்கு முன்­ன­தாக மரைக்கார் தீவு பகு­திக்கு வட்­ட­ரக்க விஜித்த தேரர் மேற்­கொண்ட விஜ­யத்­திற்கு மறுநாள் ஞான­சா­ர­தே­ரரும் அங்கு சென்று அந்த முஸ்லிம் மக்­களைச் சந்­தித்­தி­ருந்தார். அந்தச் சந்­திப்­பின்­போது, மரைக்கார் தீவு முஸ்லிம் மக்­களின் பிரச்சி­னை­களை அவர்­க­ளிடம் கேட்­ட­றி­வ­தற்குப் பதி­லாக, அவர்கள் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு­ரிய காணி­களை அடாத்­தாக அப­க­ரித்து அங்கு குடி­யே­றி­யி­ருப்­ப­தாகக் குற்றம் சுமத்தி அவர்களை அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யேற வேண்டும் என்று அச்­சு­றுத்தும் வகையில் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்தார். 

    இது மட்­டு­மல்­லாமல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல நட­வ­டிக்­கைகள், ஆர்ப்­பாட்­டங்கள், பேர­ணிகள் என்­ப­வற்றில் தீவிர அர­சி­யல்­வா­தி­க­ளிலும் பார்க்க வேகத்­தோடும் உத்­வே­கத்­து­டனும் நடந்து கொண்­டி­ருந்தார். அண்­மையில் அளுத்­கம பிர­தே­சத்தில் இடம்­பெற்­றி­ருந்த முஸ்லிம் மக்கள் மீதான தாக்­கு­தல்­க­ளிலும் இவரே முன்­னி­லையில் இருந்து செயற்­பட்­டி­ருந்தார் என்று பகி­ரங்­க­மாக இவர் மீது குற்­றம்­சாட்­டப் பட்­டி­ருக்­கின்­றது. 

    இவ­ரு­டைய நட­வ­டிக்­கைகள் பல ஊடகத் தொலைக்­காட்­சி­களில் காணொ ளி­க­ளாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டி­ருக்­கின்­றன. இவற்றைப் பார்க்கும் போது, அவர் அணிந்­துள்ள காவி உடைக்கும், அவ­ரு­டைய செயற்­பா­டு­க­ளு க்கும் பொருத்­த­மில்­லா­தி­ருப்­பதை உணர்ந்து கொள்ள முடியும். அஹிம்சை, கருணை, காரு ண்யமாக, நடந்­து­கொள்­வாரா என்ற சந்­தேகம் ஏற்­ப­டு­வதைத் தவிர்க்க முடி­யா­தி­ருக்­கின்­றது. 

    உண்­மை­யி­லேயே அவர் பௌத்த துற­வி­யாக மாறு­வ­தற்கு முன்னர் இரா­ணு­வத்தில் இணைந்து பணி­யாற்­றி­யவர் என்றும், அதற்குப் பின்னர் இரா­ணு­வத்தை விட்டு தலை­ம­றை­வா­கியி­ருந்­ததன் பின்பே பௌத்த துறவி­யாக மாறினார் என்றும் ஒருதகவல் கசிந்­தி­ருக்­கின்­றது. அளுத்­கம பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் மீது நடத்தப்­பட்ட தாக்­கு­தல்கள் குறித்து எழு­தி­­யுள்ள பத்தி எழுத்­தாளர் ஒருவர் தனது கட்­டு­ரை­யொன்றில் இதனைக் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

    ஞான­சார தேரரின் நட­வ­டிக்­கை­களும், முஸ்­லிம்கள் மீதான அவ­ரு­டைய வெறுப்­பு­ணர்­வு­கொண்ட பேச்­சுக்கள் நட­வ­டிக்­கைகள் என்­பனவும் இதனை உறு­திப்­ப­டுத்­து­வது போலவே அமைந்­தி­ருக்­கின்­றன. பொது­பல சேனா அமை ப்­பா­னது, மத­ரீ­தி­யான அமை­தி­யின்­மையைத் தூண்டும் வகையில் தொடர்ச்­சி­யாகச் செயற்­பட்டு வரு­கின்ற போதிலும் அதனைத் தடை­செய்ய முடி­யாது என்று ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ருக்­கின்றார். 

    அதுவும் அளுத்­கம அசம்­பா­வி­தங்­களின் பின்னர் அவர் இதனை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். அதே­நேரம், பொது­ப­ல­சேனா அமைப்பு நிறு­வப்­பட்ட நேரம் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்தபாய ராஜ­பக்ஷ அந்த நிகழ்வில் முதன்மை விருந்­தி­ன­ராகக் கலந்து சிறப்­பித்­தி­ருந்தார்.

    இலங்கைத் தீவென்பது பௌத்த சிங்களவர்களுக்கே உரியது. இந்த நாட்டை ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம், பௌத்த மதத்திற்கே இங்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டை இந்த அரசு, முன்னெடுத்துள்ளது. 

    பௌத்த மதத்தின் உண்மையான கோட்பாடுகளைப் பின்பற்றிச் செயற்பட்டு வருகின்ற பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்தர்களுக்கு அழுத்தமாகவும், ஆழமாகவும் உணர்த்துவதற்காகவே முன்னர் இராணுவத்தில் பணியாற்றியதாகக் கூறப்படுகின்ற ஞானசார தேரரின் தலைமையில் பொதுபல சேனா அமைப்பை வலுவுள்ள – யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத பலமுள்ள அமைப்பாகச் செயற்படுவதற்கு அரசாங்கம் அனுமதித்திருப்பதாகத் தெரிகின்றது. 

    பொலிசாரையே அதட்டி, மிரட்டி, அடக்கும் அளவுக்குப் புலம் வாய்ந்த அமைப்பாக விளங்குகின்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடாக உண்மையான மதக் கோட்பாடுகளைக் கொண்ட பௌத்த மதச் செயற்பாடுகளில் அரசியல் உள்நோக்கத்துடன், இராணுவ ஊடறுப்புப் பாணியில் அரசு ஊடறுத்துச் செயற்படுவதாகவே சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது. 

    இந்தப் பின்னணியில் சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள், மத உரிமைகள் என்பவற்றை மறுத்து பேரினவாத அரசியல் போக்கை முன்னெடுப்பதற்கும் இந்த இராணுவ ஊடறுப்பு உத்தியை அரசாங்கம் பயன்படுத்தி வருவதைத் தெளிவாக உணர முடிகின்றது.

    இதனை, இன்னும் சற்று ஆழமாக நோக்குகையில், ராஜபக்க்ஷ குடும்பத்தினர் அரச குடும்பமாக நீண்ட காலத்திற்கு அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் நிலைத்து நிற்பதற்காக, இந்தப் பேரின வாத சிந்தனையையும் செயற்பாடுகளையும் இந்த அரசாங்கம்பயன் படுத்துகின்ற தந்திரோபாய அணுகுமுறையை இனம் கண்டுகொள்ள முடியும். 

    காலம் காலமாக சிங்கள மக்கள் பௌத்தர்கள், இந்த நாட்டில் தமிழ்,முஸ்லிம் மக்களுடன் அன்னியோன்யமாக ஐக்கியமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். யுத்தம் முடிவடைந்ததன் பின் னர், அந்தமக்கள் மீது அவர்கள் வெறுப்பு கொள் வதற்கும், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் அவர்களை அடக்கியொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு கிடையாது. 

    இந்தநிலையில் அவர்களுடைய தாராள சிந்தையையும், சக சமூகத்தினருடன் இணைந்து வாழ வேண்டும் என்றசமூக நற் பண்பையும் குடும்ப ஆதிக்கம் கொண்ட சுய அரசியல் இலாபத்திற்காகவே இந்த ஊடு ருவல் அரசியல் உத்தியை இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

    -வீரகேசரி-
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: அரசியலில் இராணுவத் தலையீடுகள் -வீரகேசரி Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top