ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி
தலைவருமான ரணில் விக்கிரம சிங்கவிற்கு சனிதோஷம் இருப்பதாக அவரின் சோதிடர்கள் கூறியுள்ளனராம். சோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய ரணில் விக்கிரமசிங்க தமிழகத்திலுள்ள திருநள்ளாறு சனிஸ்வரன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு சனி தோஷ பரிகாரம் நடக்கவுள்ளது. வழமையில் ஆளும் வர்க்கத்திற்கு எதிர்க்கட்சி தலைவராக இருப்பவரே சனி தோஷமாவார். ஆனால் இங்கோ எதிர்க்கட்சித் தலைவருக்கே சனி தோஷம் என்பதால் ஆளுங்கட்சியின் ஆட்சி பலம்பெறும் என்பது சோதிடவிதி. பொதுவில் இலங்கையில் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு சனி தோஷம் பிடித்தால் அவர்கள் இந்தியாவிற்கு செல்வது வழக்கம்.
2009 களிலும் இப்படியான தோஷம் நீங்க இலங்கையின் ஆட்சியாளர்கள் இந்தியாவிற்குச் சென்று மத்திய அரசிடம் மன்றாட, மத்தியிலிருந்த பொங்கு சனிகள், தோஷ பரிகாரம் செய்து அவர்களைப் பக்குவமாக அனுப்பி வைத்தனர். இந்தியாவில் வைத்துத் தோஷ பரிகாரம் செய்தது மட்டுமல்லாமல் இலங்கைக்கும் அடிக்கடி வந்து சனி தோஷ பரிகாரத்திற்கு வேத மோதிச் சென்றனர்.
தெற்கில் சனி தோஷம் நீங்க, அது வடக்கைப் பாதித்தது. இறுதியில் மத்தியில் பொங்கு சனியாக இருந்தவர்களும் சனி தோஷம் நீக்கப் போய் மங்கு சனியாகி ஆட்சியிலிருந்து மாண்ட னர். இப்போது மத்தியில் மோடி ஆட்சி. இங்கோ சீனாவுடன் சிநேகிதம். ஆக, மத்தியில் முன்னிருந்த ஆட்சி யாளர்கள் இலங்கை ஆட்சியாளர்களுக்கு சனி தோஷ பரிகாரம் செய்திருந்தாலும், செய்த வினை விடாது என்பதாக, சீனாவை பற்றிக்கொள்ள, அதுவே இலங்கை ஆட்சிக்கு மீள்சனியாகிப் போயிற்று.
இவை ஒருபுறம் நடந்தேற, இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது சனி தோஷத்தை நீக்க இந்தியா சென்றுள்ளதுதான் இங்கு முக்கிய விடயமாகும். திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் சனிஸ்வரப் பெருமான், ரணிலின் தோஷத்தை சங்கரித்து அவருக்கு சனி தோஷ விடுதலை கொடுக்கலாம்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை மிக இறுக்கமாகப் பிடித்து அந்த கட்சியை மங்கு திசைக்கும் அதிலி ருந்து மரணதிசைக்கும் கொண்டு செல்லும் ரணில் தோஷத்தை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது தான் இன்னமும் தெரியாத விடயமாக உள்ளது. தோஷத்தை தோம் பிடித்தால் சாதககாரனுக்குச் சாதகம் என்பது நமது கண்டுபிடிப்பு அவ்வாறாயின் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு தோஷம்.
ரணிலுக்கு சனி தோஷம். ஆக தோஷத்தை தோஷம் பிடிக்க ஐக்கிய தேசியக் கட்சி ஓரளவிற்கு மீட்சி பெற்றது. இதற்கு தென் பகுதி யில் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல் சான்றாதாரமாகும். ஆனால் இப்போது ரணில் விக்கிரமசிங்க தன்னைப் பிடித்துள்ள சனி தோஷத்தை நிவர்த்திக்க தோஷ பரிகாரம் செய்கிறார். எனவே, இதன்மூலம் அவர் பலம் பெறுவார். அவர் பலம் பெற, ஐக்கிய தேசியக் கட்சி மீதான அவரின் தோஷம் உச்சம் பெறும்.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சி மீளமுடியாதவாறு தோப்பட்டு கட்சி உறுப்புரிமை, ஆசனம், எதிர்க்கட்சி வல்லமையயன அனைத்தும் இழக்கும். சிலவேளை ஆட்சியாளர்களின் தன, தானிய, சுவர்ண புஷ்பாஞ்சலியில் கட்சி புஸ்வாணமாகியும் போகலாம். எனவே ரணிலின் சனி தோஷத்திற்கு முன்னதாக ரணிலின் தோஷத்தில் இருந்த ஐ.தே. கவை காப்பாற்ற கட்சியின் பிரமுகர்கள் மகாயாகம் நடத்தி அதில் தலைமையை ஆகுதியாக்க வேண்டும். அதுவே கட்சிக்கு சுகம் தரும்.