விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 5 பேருக்கு
16 வருட தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. நெதர்லாந்து ஹேக்கின் உள்ளுர் நீதிமன்றம் ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு 10 முதல் 16 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.இவர்கள் 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட குற்றங்களுக்காகவே இந்த தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று நீதிமன்றில் அரசதரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். குறித்த ஐந்து பேரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்தினர் தமிழீழத்துக்கு ஆதரவாக நாட்டுக்கு வெளியே பிரசாரங்களை மேற்கொண்டனர் என்றும்
போரின் காரணமாக உயிருக்கு பயந்து நெதர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள தமிழர்கள் மத்தியில் குறித்த ஐந்து பேரும் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தனர் என்றும் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தினர் குறித்த ஐந்துபேருக்கும் நெதர்லாந்து நீதிமன்றம் 2 முதல் 6 வருட சிறைத்தண்டனையை விதித்த போதே அரச தரப்பில் இந்த காரணங்கள் கூறப்பட்டு தண்டனை அதிகரிப்பு கோரப்பட்டுள்ளது.