யுத்தத்தின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய
ஆடை தொழிற்சாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆடை தொழிற்சாலை நிர்மாணிக்கப்படுவதன் மூலம் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் 150 யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முல்லைத்தீவு படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.போரில் பாதிக்கப்பட்ட யுவதிகளுக்கு இதன் மூலம் வாழ்வாதார வசதிகள் கிடைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலைகளுக்கு யுவதிகளை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் நேற்று புதுக்குடியிருப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் 200 யுவதிகள் கலந்து கொண்டனர்.