ஆட் கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்தக்
கோரி எதிர்வரும் 05ம் திகதி முல்லைத் தீவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. காலை 9.00மணி தொடக்கம் 11.00 மணிவரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இக்கவனயீர்ப்பு போராட்டத்தை சரணடைந்து காணாமல் போனோரது உறவினர்கள் மேற்கொள்ளவுள்ளனர்,அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடைபெறவுள்ள பன்னிரண்டு ஆட்கொணர்வு மனு வழக்காளிகளிற்கு ஆதரவாகவும், வலுச்சேர்க்கும் வகையிலும் காணாமல் போன உறவுகள் தொடர்பாக தங்களுடைய உணர்வை, தங்கள் அவலவாழ்வை, இயலாமையை வெளிப்படுத்தவும் இந்தகவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களை சேர்ந்த இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ள உறவுகளின் குடும்பத்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் அனைவரையும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ள வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை காலை 9.00மணி தொடக்கம் 11.00 மணிவரை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை சரணடைந்த காணாமல் போன உறவினர்கள் மேற்கொள்ள உள்ளனர்,
அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடைபெறவுள்ள பன்னிரண்டு ஆட்கொணர்வுமனு வழக்காளிகளிற்கு ஆதரவாகவும், வலுச்சேர்க்;கும் வகையிலும் காணாமல் போன உறவுகள் தொடர்பாக தங்களுடைய உணர்வை, தங்கள் அவலவாழ்வை, இயலாமையை வெளிப்படுத்தவும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
எனவே கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ் மாவட்டங்களை சேர்ந்த இராணுவத்தினரிடம் சரணடைந்த. காணாமல் போன உறவுகளின் உறவினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள். மனிதஉரிமை செயற்பாடாக கருதி மனிதாபிமானம் மிக்கவர்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப் படுகின்றார்கள்.