தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை குழுவொன்றை நியமித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது கூட்டத்தொடரில், நவநீதம்பிள்ளை இந்த குழு தொடர்பிலான தகவல்களை வெளியிடவுள்ளார். பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அவர் இறுதியாக உரை நிகழ்த்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது கூட்டத் தொடரில் மனித, உரிமைகள் ஆணையாளர் நிகழ்த்தவுள்ள உரையின் பிரதியொன்று வெளியாகியுள்ளது.
இதற்கமைய இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக ஐநா மனித உரிமைகள் ஆணையகம் குழுவொன்றை நியமித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதியுயர் மட்டத்திலான நல்லிணக்க செயற்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, முழுமையான விசாரணைக்கு தேவையான விசேட அதிகாரங்கள் மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்பு கிடைக்கும் குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பகத்தன்மையுடன் கூடிய உண்மையை கண்டறியும் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது கூட்டத் தொடருக்கான ஆங்குரார்ப்பண உரையில் இலங்கையிடம் நவநீதம் பிள்ளை வேண்டுகோள் விடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஜோர்தானின் நிரந்தர பிரதிநிதி இளவரசர் செய்ட் ராட் அல் ஹுசைனை, நியமிக்க தாம் எண்ணியுள்ளதாக ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிராந்திய குழுக்களின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலுக்கு பின்னர் அவர் இந்த பரிந்துரையை ஐ.நா பொதுச் சபையில் முன்வைத்துள்ளார்.