மேஷம்
வரவு திருப்தி தரும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வாகன யோகம் கிட்டும். பெற்றோர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். தொழில், வியாபார போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபகாரிய செய்தியன்று வந்து சேரலாம்.
மிதுனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். திருமண சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
கடகம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.
சிம்மம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கன்னி
கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். அன்னிய தேச பயணம் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். மனதில் சந்தோஷம் குடி கொள்ளும்.
துலாம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கை கூடும்.
விருச்சகம்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். பக்கத்தில் இருப்பவர்கள் தக்க விதத்தில் உதவியைச் செய்ய முன்வருவர்.
தனுசு
வழிபாட்டின் மூலம் வளர்ச்சியைக் காண வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம்.
மகரம்
ஆசைகள் நிறைவேறும் நாள். உற்றார், உறவினர்களின் வருகை உண்டு. நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.
கும்பம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கடனாக கைமாத்தாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.
மீனம்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.