வயதானவர்களின் உடலில் உள்ள இரத்தத்தை எடுத்து விட்டு இளைஞர்கள்
அல்லது இளம் பெண்களின் இரத்தத்தை உடலில் செலுத்துவதன் மூலம் கடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.இதைத் தற்போது ஆய்வக அளவில், எலிகளிடம் மட்டும் சோதனை செய்து பார்த்துள்ளனர். அடுத்து வயதானவர்களிடம் இந்த சோதனையை நடத்தவுள்ளனராம். இளம் இரத்தத்தை செலுத்துவதன் மூலம், இயற்கையாகவே அந்த இரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்கள், நமது உடலைப் புதுப்பித்து சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள். இது தொடர்பான ஆய்வை 18 மாத எலியிடம் செய்து பார்த்துள்ளனர். அந்த எலிக்கு, 3 மாத எலியின் இரத்தத்தை திரும்பத் திரும்பச் செலுத்தி சோதனையிட்டுள்ளனர். இதற்கு ‘வேம்பயர் தெரப்பி’ என்று பெயரும் சூட்டியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் இள இரத்தம் செலுத்தப்பட்ட வயதான எலிக்கு நினைவாற்றல் அதிகரித்ததாம். இளம் எலி போல சுறுசுறுப்பாகவும் அது செயல்பட்டதாம்