ஐ.பி.எல் நேற்றையப் போட்டியில் கொல்கத்தா
அணி புள்ளிப்பட்டியலில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளியதைத் தொடர்ந்து அந்த அணிக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. நேற்று ஐதராபாத் அணிக்கெதிராக நடந்த போட்டியில் 15.2 ஓவரில் கொல்கத்தா வென்றால், அந்த அணி இரண்டாம் இடம் பெறலாம் என்ற நிலை இருந்தது.
இதைத் தொடர்ந்து யூசுப் அதிரடி கைகொடுக்க, வெறும் 14.2 ஓவரில் 161 ஓட்டங்கள் என்ற இலக்கை கொல்கத்தா எட்டியது. இதனால், சென்னை அணி, இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஐ.பி.எல் விதிப்படி, புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ள அணிகள் மோதும் ‘தகுதிச்சுற்று–1’ல் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 3, 4வது இடம் பெறும் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி வாய்ப்பை பெற இயலாது.
இந்த அணி, ‘தகுதிச்சுற்று 1’ல் தோற்ற அணியையும் வீழ்த்த வேண்டும். இப்போது சென்னை அணி 3வது இடத்தில் உள்ளதால், இரு போட்டிகளில் வென்றால் மட்டுமே, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சிக்கல் எழுந்துள்ளது.