மலையாள நடிகையான காவ்யா மாதவன், படத்தின்
இயக்குனரின் தோற்றத்தை பிடிக்காமல் ஒரு படத்திலிருந்து வெளியேறி இருக்கிறார். இதைப் பற்றி அந்த இயக்குனரே சொன்னதுதான் வேதனையான ஒரு விஷயம். மலையாளத்தில் 'சாய்ரா, வீட்டிலுக்குள்ள வழி, ஆகாசதின்டே நிறம், பேரறியத்தவர்' போன்ற படங்களை இயக்கியவர் ஓமியோபதி மருத்துவராக இருந்து இயக்குனரான பிஜுகுமார் தாமோதரன் என்கிற டாக்டர்.பிஜு.இவர் இயக்கிய 'சாய்ரா' திரைப்படம் இந்திய பனோரமாவுக்குத் தேர்வு பெற்ற ஒரு படம். 'வீட்டிலுக்குள்ள வழி, பேரறியத்தவர்' படங்கள் தேசிய விருது வென்ற படங்கள். 2005-ம் ஆண்டில் வெளிவந்த 'சாய்ரா' படத்தை இவர் இயக்கிய போது அந்த படத்தில் நாயகியாக நடிக்கவிருந்தவர் காவ்யா மாதவன். ஆனால், அந்த படத்திலிருந்து அவர் ஆரம்பத்திலேயே விலகிவிட்டார். சில காட்சிகளில் காவ்யாவிற்கு திருப்தி இல்லை என அப்போது காரணம் சொல்லப்பட்டது.
அதன் பின் அந்த படத்தில் நவ்யா நாயர் நடித்தார். ஆனால், உண்மையான காரணத்தைப் பற்றி இப்போதுதான் வாய்திறந்திருக்கிறார் இயக்குனர் பிஜு. ஒரு இயக்குனருக்கான தோற்றம் இல்லாமலிருந்த பிஜுவைப் பிடிக்காததால்தான் அந்த படத்திலிருந்து வெளியேறினாராம் காவ்யா மாதவன். ஆனால், நவ்யா நாயருக்கு என் தோற்றத்தில் எந்த பிரச்சனையுமில்லை, அதனால்தான் அவர் நடித்தார் என சொல்லியிருக்கிறார்.