நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. 284 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன்
நிலையான ஆட்சியொன்றை அமைப்ப தற்கு தேவையான வரலாறு காணாத வெற்றி யை பெற்றுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 338 இடங்களை வென்றுள் ளது. காங்கிரஸ் 44 இடங்களைப் பெற்று அதன் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
இந்திய தேசத்தின் நாயகனாகவும் புதிய பிரதமராகவும் நரேந்திர மோடியை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். வதோதரா தொகுதியில் 5 இலட்சத்துக்கு அதிகமாகவும், வாரணாசியில் 3 இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்று மோடி பெரும் வெற்றியடைந்திருப்பது மக்கள் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட நம்பிக்கையையும் அன்பையும் பறைசாற்றுகிறது. நாலா திசையிலும் பா.ஜ.க. வின் மகாசக்தியான பாரத அன்னையின் பரிபூரண ஆசியே மக்களின் வாக்குகளாக மோடியின் அரசாங்கத்துக்கு உரம் சேர்த்திருக்கின்றது.
சில குறிப்பிட்ட சமுதாய மக்கள் முழுவதுமாக மோடிக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று ஆருடம் கூறிய அரசியல் பண்டிதர்களின் கருத்துக்களைத் தவிடு பொடியாக்கி, முஸ்லிம்கள், தலித்கள், வனவாசிகள், நகர்ப்புற மக்கள், கிராமவாசிகள் என வெவ்வேறு தரப்பினரும் அதிகமாக வாழும் எல்லாவிதமான தொகுதிகளையும் தழு வியதாக பா.ஜ.க.வின் வெற்றி அமைந்திருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஒரு பரிசோதனை முயற்சியாகவே களமிறங்கியது. இருந்தும் கணிசமான வாக்குகளைப் பெற்ற போதும், இடங்களை வெல்லும் அளவுக்கு பெரிய சக்தியாக மாற்றம் பெறவில்லை.
தமிழ் நாட்டிலுள்ள மொத்தம் 39 தொகுதிகளில் கன்னியாகுமரியில் ஒன்றும் தருமபுரியில் ஒன்றுமாக இரண்டு தொகுதிகள் தவிர்ந்த 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று காங்கிரஸுக்கு அடுத்து 3ஆவது பெரும் கட்சியாக மாறியிருக்கின்றது. ஒவ்வொரு முறையும் இந்தியத் தேர்தல்கள் அளிக்கும் ஆச்சரியங்கள் நம்மால் கற்பனை செய்ய முடியாதவை ! மோடியின் தலைமையையும், அவரது சாதனைகளையும் முன்மொழிந்தும் அவரது வளர்ச்சியையும் நல்லாட்சியையும் மையமாக கொண்டு பா.ஜ.க. செய்த பிரசாரங்கள் பெரும் பயனளித்துள்ளன.
இந்தத் தேர்தலை ஒரு மாபெரும் சவாலாக, வேள்வியாக, தவமாக எடுத்துக் கொண்டு பா.ஜ.க. தலைவர்கள், கட்சிப் பணியாளர்கள், தொண்டர்கள், இளைஞர் அமைப்புகள், இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்று பற்பல தரப்பினர் பணியாற்றினர். இந்த வெற்றியானது இவர்கள் அனைவரும் தலைமீது வைத்துக் கொண்டாடும் சொத்து. நரேந்திர மோடியின் வெற்றி என்பது ஒரு அரசியல் தலைவரினதோ அல்லது அரசியல் கட்சியினதோ வெற்றியல்ல.
ஒரு மகத்தான இந்தியக் கனவின் வெற்றி. மிக எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையிலும் கடும் உழைப்பிலும் வளர்ந்து, தனது தாய், தந்தையரின் தியாகங்களையும் கனவுகளையும் சுமந்து, மலினமான அரசியல் சூழலுக்கு நடுவிலும் வீரம், தேசபக்தி, நேர்மை, தன்னல மின்மை, எளிமை, தியாகம், மனவுறுதி ஆகிய உன்னத பண்பு களைக் கைவிடாமல் அல்லும் பகலும் அயராது உழை த்து, படிப்படியாக உயர்ந்து நாட்டின் தலைமைப் பதவியை எட்டியிருக்கும் ஒரு மாமனிதரின் சரித்திரம் எழுதப்படும் தருணம் இது.
தாயாரின் ஆசீர்வாதம் மோடி தனது பெற்றவளை காந்தி நகரில் அவர் வாழும் எளிய இல்லத்தில் கடந்த வாரம் சந்தித்தார். அனைத்து தொலைக்காட்சிகளும் அந்த அற்புத தருணத்தை பெருமிதத்துடன் ஒளிபரப்பின மெலிந்த கைகளால், அந்தத் தாய் தனது திருமகனின் தலைமீது கைவைத்து ஆசியளித்து, நெற்றியில் திலகமிட்டு, வாயில் இனிப்பை ஊட்டி அவர் தோள்களையும் கைகளையும் வருடினார்.
அதைப் பார்த்த எத்தனையோ இலட்சோப இலட்சம் இதயங்கள் நெகிழ்ந்திருக்கக் கூடும். இந்திய திருநாட்டின் அன்னையர்களின் ஆசிகள் அனைத்தும் அந்தத் தாயின் கரங்களினூடாக இறங்கி நரேந்திர மோடியை வாழ்த்திய தருணம் அது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தேச நலனிலும், வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட ஆட்சி மத்தியில் அமையப் போகிறது. இதற்கு முந்தைய வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை விடவும் பல மடங்கு ஆற்றலும், செயல்திறனும், தெளிவான தொலைநோக்குப் பார்வையும் கொண்டதாக நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி இருக்கும்.
இனி வரும் 15 வருடங்கள் இந்திய சமூகத்தின், அதன் இளைஞர் சக்தியின் முடக்கி வைக்கப் பட்டிருந்த ஆற்றல்கள் அனைத்தையும் வெளிக் கொணர்வதாக இருக்கும். குஜராத் என்றால் காந்தி மட்டுமே நினைவுக்கு வந்தது ஒரு காலம். இன்று மோடியும் சேர்ந்தே வருகிறார். சமகால அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக குஜராத்தின் மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியமைத்து நரேந்திரமோடி தலைமை யிலான அரசாங்கம் கடந்த 12 ஆண்டுகளில் குஜராத் தில் ஏற்படுத்திய மாற்றங்கள், முன்னேற்றங்கள், சாதனைகள் போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை என்தே உண்மை.
இந்த வளர்ச்சிக்கு காரணம் மாநில அரசின் செயல் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்திருக்கின்றது. தனியொரு மனிதனான மோடி என்கின்ற தலைவனின் மகத்தான சேவைமட்டுமே இந்த வெற்றிக்கு காரணம். இந்த தன்னிகரற்ற தலைவ னின் வாழ்க்கை எனும் பெட்டகத்தை சற்று திறந்து பார்த் தால் மட்டுமே மேற்சொன்ன யதார்த்த நிலையினை புரிந்து கொள்ள முடியும். மோடியின் எளிமையான வீடு பிற அரசியல்வாதிகளின் வீட்டைப் போன்று இல்லை மோடியின் வீடு.
வெளியிலிருந்து எவரும் இவர் வீட்டிற்கு வரமாட்டார்கள். இவரும் குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர வேறு எவரையும் தன் வீட்டிற்கு அனுமதிப்பதில்லை. அரசாங்கம் இவருக்கு கொடுத்த சொகுசு பங்களாவில் ஒரு சமையல்காரர், இரண்டு சாரதிகள் மட்டுமே மோடி வீட்டு உரிமையாளர்கள். ஒரு மாநில முதல்வரின் வீடு அது என்றால் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். சமையல் காரர் வரவில்லை என்றால் சாரதி ஒருவரே சமையல் வேலையை பார்த்துக்கொள்வார்.
திருமணம் செய்துகொள்ளவில்லை (பால்ய விவாகம் நடந்ததாக எதிர்க் கட்சி யினர் விமர்சனம் செய்கின்றனர்). அரசாங்கம் தனக்காக கொடுத்த வீட்டில் தனது வீட்டாரைக் கூட இணைத்துக்கொள்ளவில்லை மோடி. 95 வயதான தாய் தன்னுடைய மூத்த சகோதரரின் வீட்டில் தங்கியிருக்கிறார். மூத்த சகோதரர் அரச சுகாதாரத் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இரண்டாவது சகோதரர் நகரத்தின் ஒரு பகுதியில் சில்லறைக் கடை வைத்திருக்கிறார். மூன்றாவது சகோதரர் அரச துறையில் சாதாரண எழுதுவினைஞராக பணிபுரிகிறார்.
பலபேருக்கு இந்த எழுதுவினைஞரின் அண்ணன்தான் மாநிலத்தின் முதல்வர் என்பது தெரியாது. முதல் அமைச்சருடன் அவருடைய மூன்று சகோ தரர்களையோ அல்லது இரண்டு சகோதரிகளையோ யாரும் இணைந்திருந்து பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர் மோடியின் ஆதரவாளர்கள். தினமும் காலையில் சுமார் 4.30 மணிக்கு எழுந்துவிடுவார்.
ஒரு மணி நேரம் யோகா செய்வதற்கு ஒதுக்கிவிடுவார். பின்னர் தனக்கு வந்த இணைய குறுஞ்செய்திகளை பார்வையிட்டு அலசத் தொடங்கிவிடுவார். இணையத்தில் குறிப்பாக கூகுளில் செய்திகளை பார்வையிடுவார். அன்றைய தினசரிகள் அனைத்தும் முதல்வரின் வீட்டிற்கு காலையில் வந்துவிடும். மோடியின் அலுவலகம் காலை சுமார் 7.30 மணிக்கு முதல்வர் தன்னுடைய அலுவல் பணிகளை ஆரம்பித்துவிடுவார்.
இவருக்கு கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மீது அலாதி ஈடுபாடு. அரச அலுவல்களை மேம்படுத்துவதற்காக அனைத்து துறைகளிலும் தகவல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. பம்பரம் போல் வேலை செய்வார். 15 நிமிடங்களுக்கு அதிகமாக நான் ஓய்வெடுத்ததில்லை என்று அவரே ஒரு கூட்டத்தில் உரையாடும் போது தெரிவித்திருக்கிறார். அபார ஞாபக சக்தி. எந்த வேலையை யாரிடம் கொடுத்தால் வேலை வெற்றிகரமாக முடியும் என்று நன்கு அறிந்தவர்.
ஒரு பிரச்சினையின் முழு பரிமாணத்தையும் தெரிந்துகொள்ளாமல் அதற்கு பதில் தேடமாட்டார். ஒரு பிரச்சினையை நன்கு புரிந்து கொண்டாலே அதற்கான பாதித் தீர்வினை பெற்றுக்கொண்டது போலா கிவிடுமல்லவா என்று அடிக்கடி கூறுவார். தற்காலிகமான தீர்வெல்லாம் அவருக்கு பிடிக்காது. முழு தீர்வுதான் அவரைப் பொறுத்தவரை சரியான தீர்வு. ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்படியாவது முடிக்காமல் ஓய்வெடுக்கமாட்டார்.
பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்தாயிற்றே, இனிமேல் நமக்கென்ன என்று சும்மா இருந்துவிடமாட்டார். பொறுப்பை ஒப்படைத்தவரிடம் விசாரிப்பார். மேற்பார்வை செய்வார். யாரிடமிருந்து நல்ல யோசனை வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டதினால் மற்றவர்களின் யோசனைகளை காது கொடுத்து கேட்பார். மேலாண்மை நிர்வாகத்தில் புதிய யுக்திகளை கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக நிர்வாகம் சார்பான இணைப்பாடவிதான வகுப்புகளுக்குச் செல்வார்.
கூடவே தன்னுடைய தனது அமைச்சர்களையும் கூட்டிச் செல்வார். அவருக்கு எதிலும் தாமதம் பிடிக்காது. வேலையை செய்வது மட்டுமல்லாது அதை சரியாக செய்தாகவேண்டும். தான் எடுத்துக்கொண்ட பணி சரியாக நடைபெறவில்லை என்றால் பொறுமை இழந்துவிடுவார். தன்னுடைய அலுவல் முடிந்து நித்திரைக்கு செல்லும் போது நள்ளிரவாகிவிடும். அவர் சுமார் நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் நித்திரை செய்வாராம்.
ஒருகாலகட்டத்தில் 'டைம்ஸ் ஒப் இந்தியா' பத்திரிகை நிருபர் இவரை பேட்டி எடுக்க மூன்று நாட்கள் இவருடன் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மூன்று நாட்களில் இவருடைய வேலை பளுவை பார்த்த அந்த நிருபர் அசந்தே போய்விட்டாராம்.
இப்படி வேலை செய்ய தங்களால் எப்படி முடிகிறது? என்று நிருபர் கேட்கதற்கு 'நான் செய்யும் பணிக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டேன்' அதனால் அந்த பணி எனக்கு பளுவாகத் தெரிய வில்லை’ என்று பதிலளித்துள்ளார்.
வரவேற்பதில் வள்ளல்...
“மோடியை நீங்கள் சந்திக்கச் சென்றீர்களானால் அவர் கவனம் முழுவதும் உங்களிடம் மட்டுமே தான் இருக்கும். உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எந்தவித இடையூறுக்கும் உட்பட மாட்டார். மோடி,தான் சொல்ல வந்தக் கருத்தை நிதானமாகவும், தெளிவாகவும், மிக அழகாகவும் சொல்வார்.
நான் இந்த சாதனைகளைச் செய்தேன் என்று பெருமை அடித்துக் கொள்ள மாட் டார். மற்றவர்களைக் கவரவேண்டும் என்ற வகையிலும் பேசமாட்டார். மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வார். மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் என்று ஒருபோதும் காட்டிக்கொள்ள மாட்டார். மோடியுடன் உரையாடுவது ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போன்றது. எந்தக்கேள்வியைக் கேட்டும் அவரை மடக்க முடியாது.
அவருக்கு அபார ஞாபக சக்தி. எத்தனை நாட்கள் ஆனாலும் நடந்த விவரங்களை தத்ரூபமாக அப்படியே வெளிப்படுத்துவார். மோடிக்கு குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் நன்கு பரீட்சயம் உண்டு. மிக எளிமையான சூழலில் ஒரு தேநீர்க் கடைக்காரரின் மகனாக அவர் பிறந்தார்.
பள்ளியில் படிக்கும் காலத்திலும் புகையிரத நடைபாதையில் வேலை செய்தார். நேர்மையின், மன உறுதியின், தேசபக்தியின் சின்னமாக அவர் மிளிர்கிறார். அதனால் தான், இன்றைய இந்தியாவின் இதயங்களையும் நம்பிக்கைகளையும் அவர் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். வளர்ச்சி மீது தணியாத தாகம் கொண்ட ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி அவர். தனது செயல்களுக்குப் பொறுப்பேற்கிறவர்.
உண்மையான ஈடுபாடுள்ள ஒரு தேச சேவகர் நரேந்திர மோடி.செயல்திறன் கொண்ட ஆட்சி யையும், உறுதியான நிர்வாகத்தையும் அவர் வழங்கியிருக்கிறார். நாட்டின் மனித வளத்தையும் அதன் ஆற்றலையும் மதித்துச் செயல்படும் ஒரு தேர்ந்த ஆட்சியாளர். பண்பாட்டை மதிப்பவர். நாட்டின் உள்ளார்ந்த சக்தியை நன்கு உணர்ந்ததால் தான் இந்தியாவில் மாற்றம் கொண்டுவர முடியும் என ஐந்து அம்சத்திட்டங்களான திறமை, பண்பாடு, தொழில் நுட்பம், சுற்றுலா மேம்பாடு, வர்த்தக வளர்ச்சி ஆகியவற்றை முன்மொழிந்திருக்கிறார்.
அடுத்த தலைமுறையின் தந்தை நரேந்திர மோடி ஒரு புரட்சியாளர். தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அடுத்த தேர்தலைக் குறித்து அல்லாமல், அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பவர். அவரால் உருவாக்கப்பட்ட நர்மதை நதி மீதான சூரிய சக்தி அமைப்பு, அந்த வகையில் உலகிலேயே முதன்முறையாக செய்யப்பட்ட புரட்சி.
மேலும், பெண் குழந்தைகளின் கல்வி மீது அவர் காட்டும் தீவிரமான அக்கறை.. இவை யெல்லாம் அடுத்த தேர்தலுக்கான திட்டங்கள் அல்ல, அடுத்த தலைமுறையின் நன்மைக்காக, என்னுடய மற்றும் உங்களுடைய குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு தேச நலனை சிந்திப்பவர் நரேந்திர மோடி.
அவரே இந்தியாவின் இன்றைய தேவையாக உள்ளார். உலகத் தலைவர்கள் பலரும் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு சாதனைகள் புரிந்துள்ள மோடி பிரதமராகும் முன்பே, அதற்கான சாத்தியக் கூறு கள் தெரிகின்றன என்று உலக நாடுகள் இந்தியாவை அத ற்கு உரித்தான வகையில் மதிக்கத் தொடங்கியிருக்கின்றன.
பதவியேற்பு... எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை நரேந்திரமோடி த.லைமையிலான புதிய அரசாங்கம் மத்தியில் ஆட்சி பீடமேற காத்திருக்கின்ற தருணத்தில் மோடியின் பதவியேற்பு வைபவத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அடங்குகின்றார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை பதவியேற்பு வைபவத்திற்கு அழைத்ததையிட்டு மனம் வருந்துவதாக தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்ற செயல் என்று குறிப்பிட்டு மோடியின் பதவியேற்பு வைபவதில்கலந்து கொள்ள மறுப்பும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்றே தமிழகத்திலுள்ள பல கட்சிகளின் தலைவர்களும் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துள்ளனர். ஆற்றல் மிக்க தலைவர், தமிழ்நாட்டுக்கும் தமிழ்மக்களுக்கும் என்ன செய்யப்போகின்றார் என்பதே இப்போது எம் அனைவர் மனங்களிலும் தோன்றியுள்ள கேள்விகள்...
ஏனெனில் தமிழ் நாட்டை கொண்டு நடத்தும் விதமே இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காட்டப்போகின்ற அக்கறையின் அறிகுறிகளாகும். ஜெயலலிதாவின் புறக்கணிப்புக்கு நல்ல ஒரு வரவேற்பு இருக்குமிடத்து இலங்கைத் தமிழர்கள் ஊகித்துக் கொள்ளலாம்.
நரேந் திர மோடி தலைமையிலான பா.ஜ.க. இனி வருங்காலங்களில் இலங்கைத் தமிழர்களாகிய எங்களை வழிநடத்தப் போகின்ற தாற்பரியத்தை.