லண்டன் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் 11
தமிழா்கள் வெற்றிபெற்றுள்ளனர். லண்டனில் உள்ள 33 உள்ளுராட்சி பிரிவுகளில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் 7 உள்ளுராட்சி பிரிவுகளில் தமிழ் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பிரித்தானியாவிலுள்ள பிரதான மூன்று அரசியல் கட்சிகள் சார்பில் 41 தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் 11 பேர் வெற்றிபெற்று உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாகியுள்ளனர்.முக்கியமாக ஆளும் பழமைவாதக்கட்சி (கான்சர்வேட்டிவ் பார்டி) சார்பில் கிங்ஸ்டன் பகுதியில் போட்டியிட்டு கஜ் வேலுப்பிள்ளை என்ற இளைஞன் வெற்றிபெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.