13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என தெளிவுபடுத்த வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி முழு அளவில் வடக்கு மாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவாரா இல்லையா என்பதனை தெளிவாக அறிவிக்க வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றுடன் செய்து கொண்டுள்ள இரகசிய உடன்படிக்கை பற்றிய தகவல்களை அம்பலப்படுத்த வேண்டும்.
வட மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.எதிர்வரும் காலங்களிலும் அதேவிதமாக சட்டங்கள் அமுல்படுத்தப்டும்.
மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது பொருத்தமாகாது. இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைந்துள்ளது. மாகாணசபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் பொருத்தமற்றது என அரசாங்கம் அறிவித்த நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியது என அவர் தெரிவித்துள்ளார்.