மைத்திரியால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துவிட முடியாது - TK Copy மைத்திரியால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துவிட முடியாது - TK Copy

  • Latest News

    மைத்திரியால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துவிட முடியாது

    பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியதைப் போன்று 100 நாள்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கமுடியாது என தேசிய தொழில் வல்லுனர்களின் அமைப்பின் சட்டம் தொடர்பான இணைப்பாளர் சட்டத்தரணி சந்தன அமரசேகர தெரிவித்துள்ளார்.    


    நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதாயின் இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.   அவ்வாறு அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்.      இவை அனைத்தையும் 100 நாள்களுக்குள் செய்ய முடியாது. 

    போலியான உத்தரவாதங்களை வழங்கி மக்களை ஏமாற்றுவதற்கு பொது எதிரணியினர் முயற்சிக்கின்றனர்.   ஆட்சிக்கு வந்ததும் 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இது சாத்தியமற்றதொன்று.   அரசியலமைப்பில் இதற்கு இடமில்லை. 

    அவ்வாறு பிரதமர் ஒருவருக்கு தனது அதிகாரங்களை ஜனாதிபதி வழங்குவதாயின், ஜனாதிபதியாகவுள்ள நபர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் உள்ளவராக இருக்க வேண்டும் அல்லது வெளிநாடு சென்றிருக்க வேண்டும் அல்லது வேறு காரணங்கள் இருக்க வேண்டும்.   இதில் எந்தவொரு காரணமும் இன்றி பிரதமருக்கு அதிகாரங்களை வழங்கும் அதிகாரம் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

     100 நாள்களுக்குள் அதனைச் செய்வேன் இதனைச் செய்வேன் என போலியான உறுதிமொழிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.   இதில் காணப்படும் போலித் தன்மையை மக்களுக்குப் புலப்படுத்தி அவர்களைத் தெளிவுபடுத்த பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கப்படும்.   அரசியலமைப்பை மாற்றுவதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். அது மட்டுமன்றி மாற்றப்படவிருக்கும் அரசியலமைப்பின் திருத்தம் தொடர்பில் பொதுஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதும் அவசியம்.  

      இவ்வாறான நிலையில் 100 நாள்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் அவற்றை நிறைவேற்றுவது சாத்தியமற்றவிடயமாகும்.   நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளிலேயே பொது எதிரணியினர் இறங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மைத்திரியால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துவிட முடியாது Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top